``குறைந்துபோன வாக்கு சதவீதத்தால் திராவிடக் கட்சிகளுக்கே பாதிப்பு..!” - சொல்கிறார் பாத்திமா பர்கானா
``பரந்தூர் போராட்டத்தில் தொடர்ந்து பங்கெடுத்தது நாம் தமிழர் கட்சி... ஆனால் அந்த பகுதியில் சொற்பமான வாக்குகள்கூட பதிவாகவில்லையே..?”``மக்கள் தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள் என்பதைவிட அரசு மக்களை புறக்கணித்திருக்கிறது என்பதே செய்தி. அதனை வெளிப்படுத்தும் விதமாகவும், இம்முடிவை அவர்களின் உணர்வாகதான் மதிப்பளிக்க வேண்டும். அதேபோல்தான் வேங்கைவயல் கிராம மக்களும், தங்கள் ஆற்றாமையை முதலில் வெளிப்படுத்தினார்கள். பிறகு மாலையில் வாக்களித்தார்கள். வேங்கைவயலில் பரப்புரை செய்ய எந்த கட்சியை அனுமதிக்காத ஊர்மக்கள், நா.த.க வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷுக்கு அனுமதி வழங்கினர் என்பதும் குறிப்பிடதக்கது. தேர்தல் புறக்கணிப்போ, வாக்கு சதவீத குறைவோ.. இரண்டும் திராவிடக் கட்சிகளுக்குத்தான் பாதிப்பு. நாம் தமிழர் கட்சி 20% வாக்குகளை தாண்டும்.”சீமான்``இளைஞர்கள், போராட்டக்காரர்கள் வாக்களிப்பார்கள், 20 சதவீதம் வருவோம் என்கிறீர்கள்.. 20 நாளில் 6 கோடி வாக்காளரிடம் சின்னத்தை கொண்டு சேர்த்துவிட்டீர்களா?”``இதர போட்டியாளர்களின் சின்னம் 50 ஆண்டுகளை கடந்தது, அப்படியான சூழலில் எங்களிடமிருந்த சின்னத்தை பறித்தது, 20 நாளுக்கு முன்பு வேறு சின்னம் தரப்பட்டதெல்லாம் பெரும் அநீதி. இருந்தாலும் உரிய திட்டமிடலுடன் முடிந்தவரை சின்னம் மக்களிடம் எடுத்துச் சென்றோம். சின்னத்தை மாற்றிக் கொடுத்ததால் நா.த.க-வை வீழ்த்துவிடலாம் என்ற பா.ஜ.க-வின் கோழைத்தனம் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு தெளிவானவர்கள் என்பது தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க-வுக்கு தெரியும்.” பாஜக அண்ணாமலை``2026 சட்டமன்ற தேர்தலில் விஜய், விஷால், தொடரப்போகும் பா.ஜ.க கூட்டணி என போட்டி கடுமையாக இருக்கும்போல் தெரிகிறது. தாக்குபிடிக்குமா நாம் தமிழர்?” ஜெயலலிதா - கருணாநிதி``ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது அவர்களை எதிர்த்து அரசியல்செய்த கட்சி நாம் தமிழர். 4 பொதுத் தேர்தலை தனித்து களம்கண்ட கட்சியிடம் இந்த கேள்வியை கேட்பதைவிட புதியவர்களிடம் இந்த கேள்வியை கேட்பதுதான் சரியாக இருக்கும். மேலும் 2026 வரையிலான காலகட்டத்தில் மக்கள் போராட்டத்துக்கு வலிமை சேர்ப்பதும், ஆக்டிவ் அரசியலிலும் இருக்கப்போவது நாம் தமிழர் கட்சிதான். எனவே தேர்தலை மட்டும் மனதில் வைத்து அரசியல் செய்யும் எந்த கட்சியும் மக்கள் அரசியல் செய்யும் நா.த.க-வுக்கு தடையாக இருக்க முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக நா.த.க இருக்கும்”சீமான்``அ.தி.மு.க-வின் ’பி’ டீம் என பெயர் கிடைக்கும் அளவுக்கு பரப்புரையில் நா.த.க எடப்பாடியை விமர்சிக்காமல் கரிசனம் காட்டியது ஏன்?” ``இப்படியான கருத்துருவாக்கத்தை கண்டிக்கிறேன். மக்கள் பிரச்னையை கண்டுகொள்ளாத அ.தி.மு.க இருந்தால் என்ன.. செத்தால் என்ன என தேனியில் கேட்டார் சீமான். தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை துடிக்க துடிக்க சுட்டுக் கொன்றது அ.தி.மு.க என்றும் பேசினார். நா.த.க பேச்சாளர்கள் அ.தி.மு.க-வையும் எடப்பாடியை கேட்காத கேள்விகள் அல்ல. அவ்வளவு ஏன், தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியினர் வாகனத்தை அடித்து நொறுக்கி, நிர்வாகிகள் மீது சராமரி தாக்குதல் நடத்தினார்கள் அ.தி.மு.க-வினர். அவர்களை விமர்சித்து பேசியதால்வந்த விளைவு. எனவே பி டீம் என பேசுவதெல்லாம் கோழைத்தனம். எங்களை கொள்கைகள் காப்பியடித்து தேர்தல் அறிக்கையாகவும், பரப்புரையில் பேசும் இவர்கள்தான் எங்களின் பி டீம்” Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs“ஜூன் 4-க்குப் பிறகு அண்ணாமலை காணாமல்போவார்!” - கொதிக்கும் பாத்திமா பர்கானா
``பரந்தூர் போராட்டத்தில் தொடர்ந்து பங்கெடுத்தது நாம் தமிழர் கட்சி... ஆனால் அந்த பகுதியில் சொற்பமான வாக்குகள்கூட பதிவாகவில்லையே..?”
``மக்கள் தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள் என்பதைவிட அரசு மக்களை புறக்கணித்திருக்கிறது என்பதே செய்தி. அதனை வெளிப்படுத்தும் விதமாகவும், இம்முடிவை அவர்களின் உணர்வாகதான் மதிப்பளிக்க வேண்டும். அதேபோல்தான் வேங்கைவயல் கிராம மக்களும், தங்கள் ஆற்றாமையை முதலில் வெளிப்படுத்தினார்கள். பிறகு மாலையில் வாக்களித்தார்கள். வேங்கைவயலில் பரப்புரை செய்ய எந்த கட்சியை அனுமதிக்காத ஊர்மக்கள், நா.த.க வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷுக்கு அனுமதி வழங்கினர் என்பதும் குறிப்பிடதக்கது. தேர்தல் புறக்கணிப்போ, வாக்கு சதவீத குறைவோ.. இரண்டும் திராவிடக் கட்சிகளுக்குத்தான் பாதிப்பு. நாம் தமிழர் கட்சி 20% வாக்குகளை தாண்டும்.”
``இளைஞர்கள், போராட்டக்காரர்கள் வாக்களிப்பார்கள், 20 சதவீதம் வருவோம் என்கிறீர்கள்.. 20 நாளில் 6 கோடி வாக்காளரிடம் சின்னத்தை கொண்டு சேர்த்துவிட்டீர்களா?”
``இதர போட்டியாளர்களின் சின்னம் 50 ஆண்டுகளை கடந்தது, அப்படியான சூழலில் எங்களிடமிருந்த சின்னத்தை பறித்தது, 20 நாளுக்கு முன்பு வேறு சின்னம் தரப்பட்டதெல்லாம் பெரும் அநீதி. இருந்தாலும் உரிய திட்டமிடலுடன் முடிந்தவரை சின்னம் மக்களிடம் எடுத்துச் சென்றோம். சின்னத்தை மாற்றிக் கொடுத்ததால் நா.த.க-வை வீழ்த்துவிடலாம் என்ற பா.ஜ.க-வின் கோழைத்தனம் எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு தெளிவானவர்கள் என்பது தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க-வுக்கு தெரியும்.”
``2026 சட்டமன்ற தேர்தலில் விஜய், விஷால், தொடரப்போகும் பா.ஜ.க கூட்டணி என போட்டி கடுமையாக இருக்கும்போல் தெரிகிறது. தாக்குபிடிக்குமா நாம் தமிழர்?”
``ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது அவர்களை எதிர்த்து அரசியல்செய்த கட்சி நாம் தமிழர். 4 பொதுத் தேர்தலை தனித்து களம்கண்ட கட்சியிடம் இந்த கேள்வியை கேட்பதைவிட புதியவர்களிடம் இந்த கேள்வியை கேட்பதுதான் சரியாக இருக்கும். மேலும் 2026 வரையிலான காலகட்டத்தில் மக்கள் போராட்டத்துக்கு வலிமை சேர்ப்பதும், ஆக்டிவ் அரசியலிலும் இருக்கப்போவது நாம் தமிழர் கட்சிதான்.
எனவே தேர்தலை மட்டும் மனதில் வைத்து அரசியல் செய்யும் எந்த கட்சியும் மக்கள் அரசியல் செய்யும் நா.த.க-வுக்கு தடையாக இருக்க முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக நா.த.க இருக்கும்”
``அ.தி.மு.க-வின் ’பி’ டீம் என பெயர் கிடைக்கும் அளவுக்கு பரப்புரையில் நா.த.க எடப்பாடியை விமர்சிக்காமல் கரிசனம் காட்டியது ஏன்?”
``இப்படியான கருத்துருவாக்கத்தை கண்டிக்கிறேன். மக்கள் பிரச்னையை கண்டுகொள்ளாத அ.தி.மு.க இருந்தால் என்ன.. செத்தால் என்ன என தேனியில் கேட்டார் சீமான். தூத்துக்குடியில் போராட்டக்காரர்களை துடிக்க துடிக்க சுட்டுக் கொன்றது அ.தி.மு.க என்றும் பேசினார். நா.த.க பேச்சாளர்கள் அ.தி.மு.க-வையும் எடப்பாடியை கேட்காத கேள்விகள் அல்ல. அவ்வளவு ஏன், தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியினர் வாகனத்தை அடித்து நொறுக்கி, நிர்வாகிகள் மீது சராமரி தாக்குதல் நடத்தினார்கள் அ.தி.மு.க-வினர். அவர்களை விமர்சித்து பேசியதால்வந்த விளைவு. எனவே பி டீம் என பேசுவதெல்லாம் கோழைத்தனம். எங்களை கொள்கைகள் காப்பியடித்து தேர்தல் அறிக்கையாகவும், பரப்புரையில் பேசும் இவர்கள்தான் எங்களின் பி டீம்”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
What's Your Reaction?