`இஸ்லாமிய வெறுப்புதான் மோடியின் உத்தரவாதம்; கலவரம் வெடித்தால் அவரே பொறுப்பு!' - ஒவைசி தாக்கு
நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் களம், பிரதமர் மோடியின் மத ரீதியான பேச்சால் அதகளமடைந்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் பிரசாரம் செய்த மோடி, `நாட்டின் வளத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று காங்கிரஸ் கூறியிருக்கிறது. உங்களின் சொத்துகளை பறித்து ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொடுக்கப்போகிறார்கள். இது என் தாய்மார்களின் தாலியைக்கூட விட்டுவைக்காது' என காங்கிரஸைச் சாடுகிறேன் என்ற பெயரில் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.பிரதமர் மோடிஅதற்கடுத்த நாளே, உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில், `இஸ்லாமிய தாய்மார்களின் வாழ்வை பாதுகாப்பானதாக மாற்றியிருக்கிறோம்' என்று கூறிவிட்டு, நேற்று மீண்டும் ராஜஸ்தானில் `தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க நினைக்கிறது காங்கிரஸ்' என்று இஸ்லாமியர்களை மையமாக வைத்து மோடி பேசியிருந்தார்.இன்று சத்தீஸ்கரிலும் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு, `பட்டியல், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து மத அடிப்படையில் சிலருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரஸ் கூறுகிறது' என்று பிரசாரம் செய்திருக்கிறார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியான நாள்முதல், வாக்கு வங்கிக்காக இந்துக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் செயல்படுகிறது என்று மோடி பிரசாரம் செய்துவருகிறார். இந்த நிலையில், நாட்டில் கலவரம் வெடித்தால் அதற்கு மோடியே பொறுப்பு என AIMIM கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி கூறியிருக்கிறார்.ஒவைசி மோடியின் தொடர்ச்சியான இத்தகைய பேச்சு குறித்து தனியார் ஊடகத்திடம் இன்று பேசிய ஒவைசி, ``இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கான உத்தரவாதம்தான் மோடியின் உத்தரவாதம். 2002 முதல் மோடி இதைத்தான் செய்துவருகிறார். இந்தியாவில் 17 கோடி முஸ்லிம்கள் இருக்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகம் இவர்கள்தான். மேலும், நாட்டின் 140 கோடி மக்களுக்கும்தான் மோடி பிரதமர். ஆனால், இஸ்லாமியர்களை மோடி தொடர்ந்து காயப்படுத்துகிறார், வெறுக்கிறார். நாளை இந்தியாவில் கலவரம் ஏற்பட்டால் அதற்கு மோடிதான் பொறுப்பு'' என்று கூறினார்.‘வெறுப்பு நாக்கு!’
நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் களம், பிரதமர் மோடியின் மத ரீதியான பேச்சால் அதகளமடைந்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் பிரசாரம் செய்த மோடி, `நாட்டின் வளத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று காங்கிரஸ் கூறியிருக்கிறது. உங்களின் சொத்துகளை பறித்து ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொடுக்கப்போகிறார்கள். இது என் தாய்மார்களின் தாலியைக்கூட விட்டுவைக்காது' என காங்கிரஸைச் சாடுகிறேன் என்ற பெயரில் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அதற்கடுத்த நாளே, உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில், `இஸ்லாமிய தாய்மார்களின் வாழ்வை பாதுகாப்பானதாக மாற்றியிருக்கிறோம்' என்று கூறிவிட்டு, நேற்று மீண்டும் ராஜஸ்தானில் `தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க நினைக்கிறது காங்கிரஸ்' என்று இஸ்லாமியர்களை மையமாக வைத்து மோடி பேசியிருந்தார்.
இன்று சத்தீஸ்கரிலும் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு, `பட்டியல், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து மத அடிப்படையில் சிலருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரஸ் கூறுகிறது' என்று பிரசாரம் செய்திருக்கிறார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியான நாள்முதல், வாக்கு வங்கிக்காக இந்துக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் செயல்படுகிறது என்று மோடி பிரசாரம் செய்துவருகிறார். இந்த நிலையில், நாட்டில் கலவரம் வெடித்தால் அதற்கு மோடியே பொறுப்பு என AIMIM கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி கூறியிருக்கிறார்.
மோடியின் தொடர்ச்சியான இத்தகைய பேச்சு குறித்து தனியார் ஊடகத்திடம் இன்று பேசிய ஒவைசி, ``இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கான உத்தரவாதம்தான் மோடியின் உத்தரவாதம். 2002 முதல் மோடி இதைத்தான் செய்துவருகிறார். இந்தியாவில் 17 கோடி முஸ்லிம்கள் இருக்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகம் இவர்கள்தான். மேலும், நாட்டின் 140 கோடி மக்களுக்கும்தான் மோடி பிரதமர். ஆனால், இஸ்லாமியர்களை மோடி தொடர்ந்து காயப்படுத்துகிறார், வெறுக்கிறார். நாளை இந்தியாவில் கலவரம் ஏற்பட்டால் அதற்கு மோடிதான் பொறுப்பு'' என்று கூறினார்.
What's Your Reaction?