முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்: கனடாவை வீழ்த்தியது | T20 WC
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஜான்சன் - நவ்னீத் தலிவால் களமிறங்கினர். இதில் நவ்னீத் 4 ரன்களில் போல்டானார்.
What's Your Reaction?