மாலத்தீவில் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி

மாலத்தீவில் நடைபெற்ற  அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அபார வெற்றி பெற்றுள்ளது.

Apr 24, 2024 - 18:27
 0  4
மாலத்தீவில் ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி

மாலே: மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அபார வெற்றி பெற்றுள்ளது.

மாலத்தீவு அதிபராக முகமது முய்சு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கும் - மாலத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. முன்னதாக, அவர் தனது தேர்தல் வாக்குறுதியில், “மாலத்தீவில் வெளிநாட்டு ராணுவம் இருக்ககூடாது. இந்திய ராணுவக்குழுவை இம்மண்ணிலிருந்து வெளியேற்றுவேன்” எனக் கூறியிருந்தார். அடிப்படையில் சீன ஆதரவாளரான முய்சு இந்தியாவுடனான உறவில் மீண்டும் மீண்டும் விரிசல் ஏற்பட்டதைத் தடுக்க ஏதும் செய்யாதவராகவே இருந்து வந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist