“உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா” - ஆய்வறிக்கை

உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர்.

Apr 24, 2024 - 18:26
 0  6
“உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா” - ஆய்வறிக்கை

உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். இது மனிதர்களின் உடல்நலன், பனிப்பாறை உருகுதல், பொருளாதார நடவடிக்கைகளின் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கின்றது.

ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தான் இந்த அதிர்ச்சித் தகவல் இடம்பெற்றுள்ளது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய நகர்வை துரிதப்படுத்தினால் இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது. ஐரோப்பிய கண்டம் கடந்த ஆண்டு தனது தேவையில் 43 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கித்தக்க எரிசக்தி மூலம் உருவாக்கியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 36 சதவீதமாகவே இருந்தது என்ற தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist