மனித மூளையில் சிப்: 2-வது நபருக்கு பொருத்த ஒப்புதல் பெற்ற நியூராலிங்க்
எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியை அமெரிக்காவின் எஃப்.டி.ஏ, நியூராலிங்க் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளதாக தகவல்.
சான் பிரான்சிஸ்கோ: எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில் இரண்டாவது நபருக்கு மூளையில் சிப் பொருத்துவதற்கான அனுமதியை அமெரிக்காவின் எஃப்.டி.ஏ, நியூராலிங்க் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளதாக தகவல்.
நியூராலிங்கின் சிப்பை முதல் முறையாக மனிதரின் மூளையில் பொருத்தி உள்ளதாக தெரிவித்தது. அண்மையில் அந்த சிப்பை பொருத்திக் கொண்ட நோலண்ட் அர்பாக் எனும் நபர் அந்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார். “எல்லோரையும் போல என்னால் கணினியை இயக்க முடிகிறது” என அவர் தெரிவித்தார். அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்.
What's Your Reaction?