புதுச்சேரி | சுற்றுலா, மீன்பிடி படகுகளில் பாதுகாப்பு ஒத்திகை - என்ன ஆனது ரூ.2 கோடி ரோந்துப் படகு?
உரிய நேரத்தில் பழுதை நீக்காததால் இரண்டு ஆண்டுகளாக மக்கி வீணாகி வரும் ரூ. 2 கோடி மதிப்பிலான ரோந்து படகுக்கு பதிலாக சுற்றுலா மற்றும் மீன்பிடி படகுகளை வாடகைக்கு எடுத்து கடலோர காவல் போலீஸார் இன்று தேசிய அளவில் நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையைத் தொடங்கினர்.
புதுச்சேரி: உரிய நேரத்தில் பழுதை நீக்காததால் இரண்டு ஆண்டுகளாக மக்கி வீணாகி வரும் ரூ. 2 கோடி மதிப்பிலான ரோந்து படகுக்கு பதிலாக சுற்றுலா மற்றும் மீன்பிடி படகுகளை வாடகைக்கு எடுத்து கடலோர காவல் போலீஸார் இன்று தேசிய அளவில் நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையைத் தொடங்கினர்.
இந்திய கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. இன்று புதன்கிழமை காலை தொடங்கி நாளை வியாழக்கிழமை மாலை 5 மணி வரை சாகர் கவாச் ஒத்திகை நடைபெறுகிறது. புதுவை கடல் பகுதியில் மீன்பிடி படகில் தொலைநோக்கு கருவிகள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. புதுச்சேரி மீனவ கிராமங்களான காலாப்பட்டு, புதுக்குப்பம் வீராம்பட்டினம் உள்ளிட்ட 16 கிராமங்களில் சந்தேகம்படும்படி கடலில் தென்படும் கப்பல்கள், படகுகள் குறித்தும் சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டாலும் கடலோர பாதுகாப்பு போலீசுக்கு தெரிவிக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?