உதகை | சுற்றுலா பயணிகளுக்கு தொட்டபெட்டா செல்ல மூன்று நாட்கள் தடை
தொட்டபெட்டாவில் நுழைவுச் சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமானப் பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் இன்று (ஜூன் 19) முதல் மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்துக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
உதகை: தொட்டபெட்டாவில் நுழைவுச் சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமானப் பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் நடந்து வருவதால் இன்று (ஜூன் 19) முதல் மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்துக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் உதகை வடக்கு வனச்சரகம், தொட்டப்பெட்டா காட்சிமுனை பகுதியில் நுழைவுச் சீட்டு வழங்கும் கட்டிடம் கட்டுமானப் பணிகள் மற்றும் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் ஏப்ரல் மாதத்திலிருந்து நடைபெற்று வருகின்றன.
What's Your Reaction?