குத்தகை முறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம்: அரசுக்கு அன்புமணி கண்டனம்

தமிழக அரசு குத்தகை முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும்” என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Jun 19, 2024 - 13:19
 0  0
குத்தகை முறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம்: அரசுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழக அரசு குத்தகை முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பெறுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர்நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்ட முறையை அரசு பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist