பந்துவீச்சில் இந்திய வீரர்களை நம்பியே களமிறங்கும் லக்னோ | ஐபிஎல் 2025

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அறிமுகமான முதல் 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதேவேளையில் கடந்த ஆண்டு 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது.

Mar 19, 2025 - 17:12
 0  10
பந்துவீச்சில் இந்திய வீரர்களை நம்பியே களமிறங்கும் லக்னோ | ஐபிஎல் 2025

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அறிமுகமான முதல் 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதேவேளையில் கடந்த ஆண்டு 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை அதிரடி வீரரான ரிஷப் பந்த்தை மெகா ஏலத்தின் போது பெரும் தொகைக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்வாகம். இம்முறை அவரை சுற்றியே லக்னோ அணி கட்டமைக்கப்பட்டுள்ளது.

அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் எய்டன் மார்க் ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், மத்தேயு பிரீட்ஸ்கே, டேவிட் மில்லர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள். மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஷமர் ஜோசப் மட்டுமே வெளிநாட்டு வீரர்களில் பந்துவீச்சாளராக இடம் பெற்றுள்ளார். இதனால் லக்னோ அணி பந்துவீச்சில் முழுமையாக இந்திய வீரர்களின் திறமையை நம்பியே களமிறங்குகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist