நமீபியாவுடன் இன்று மோதல்: சூப்பர் 8 சுற்று முனைப்பில் ஆஸ்திரேலியா | T20 WC
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று காலை 6 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள ஆன்டிகுவாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதுகின்றன
ஆன்டிகுவா: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று காலை 6 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள ஆன்டிகுவாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதுகின்றன. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வென்றிருந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஒருதரப்பு ஆட்டமாக அமைந்த அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 201 ரன்கள் குவித்திருந்தது. இதன் மூலம் நடப்பு தொடரில் 200 ரன்களை குவித்த முதல் அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலியா பெற்றிருந்தது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் டேவிட் வார்னர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 பந்துகளில் 39 ரன்கள் விளாசியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
What's Your Reaction?