நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு ரூ.6,000 இழப்பீடு: பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாயும், வெள்ளாடு, செம்மறி ஆடு ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாயும், கோழி ஒன்றுக்கு 200 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.  

Mar 19, 2025 - 17:11
 0  16
நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு ரூ.6,000 இழப்பீடு: பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

சென்னை: நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாயும், வெள்ளாடு, செம்மறி ஆடு ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாயும், கோழி ஒன்றுக்கு 200 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சமீப காலங்களில், தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருமை, கோழி போன்ற கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, தமிழக மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், இச்சம்பவம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்டு கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist