தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும்: மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தீபாவளி பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்பட உள்ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்​கள் பாது​காப்​பாக தீபாவளி பண்​டிகையை கொண்​டாடு​வது குறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் ஆண்​டு​தோறும் அறி​வுரை வழங்கப்பட்டு வருகிறது.

Oct 14, 2025 - 10:42
 0  5
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும்: மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை: தீபாவளி பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்​கள் பாது​காப்​பாக தீபாவளி பண்​டிகையை கொண்​டாடு​வது குறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் ஆண்​டு​தோறும் அறி​வுரை வழங்​கப்​பட்டு வருகிறது. அதன்​படி, நடப்​பாண்​டும் மாணவர்​கள் விபத்​தில்லா தீபாவளி பண்​டிகையை மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடும் வகை​யில், பல்​வேறு அறி​வுரைகளை பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் வழங்​கி​யுள்​ளார்.

அதன் விவரம் வரு​மாறு: தீபாவளி பண்​டிகை நாளில் மக்​கள் கவனக் குறை​வாக பட்​டாசு வெடிப்​ப​தால் தீ விபத்து ஏற்​படலாம். இது தவிர, உயிர்​சேதம், பொருள் சேதங்​கள் ஏற்பட வாய்ப்​புள்​ளது. மேலும், குழந்​தைகளுக்கு தீக்​கா​யங்​களும், சில நேரங்​களில் பார்வை இழப்​பும் ஏற்​படக் கூடும். இத்​தகைய நிகழ்​வு​களை தவிர்ப்​பதும், தடுப்​பதும் நமது கடமை​யாகும். எனவே, பள்ளி மாணவர்​களுக்கு தீபாவளி பண்​டிகையை பாது​காப்​பாக கொண்​டாட விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்பட வேண்​டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist