“நாடாளுமன்றத்தில் சிறிய கட்சிகள் சந்திக்கும் பிரச்சினைகள்” - திருமாவளவன் ஆதங்கம்
''நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, நாம் நினைக்கிற போதெல்லாம் எழுந்து பேசிவிட முடியாது. இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியாகவே கருதப்படாது. அதுதான் நாடாளுமன்றத்தின் விதி'' என திருமாவளவன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை: ''நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, நாம் நினைக்கிற போதெல்லாம் எழுந்து பேசிவிட முடியாது. அதில் சில நடைமுறைகள் இருக்கின்றன. பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என்கிற பாகுபாடுகள் உள்ளன. இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியாகவே கருதப்படாது. அதுதான் நாடாளுமன்றத்தின் விதி'' என திருமாவளவன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. தமிழ்நாடு முன்னாள் ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது அவர், "புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நன்றி பெருக்கோடு ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் முன்னெடுக்கிற இந்த நிகழ்வு மிகுந்த ஆறுதலை தருகிறது. இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் நெஞ்சார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
What's Your Reaction?






