தமிழகத்தில் 2023 முதல் இதுவரை 280 பேர் உடலுறுப்பு தானம்: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் 2023-ம் ஆண்டு முதல் இதுவரை 280 பேர் உடலுறுப்பு தானம் செய்யப்பட்டு 1,595 பேருக்குப் பொறுத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளனர். உடலுறுப்பு தானம் செய்த 159 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது, என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: “தமிழகத்தில் 2023-ம் ஆண்டு முதல் இதுவரை 280 பேர் உடலுறுப்பு தானம் செய்யப்பட்டு 1,595 பேருக்குப் பொறுத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளனர். உடலுறுப்பு தானம் செய்த 159 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் நீர்மோர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர், கந்தன்சாவடி , கொட்டிவாக்கம், கடற்கரைச் சாலை போன்ற நான்கு இடங்களிலும் நீர், மோர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழக முதல்வர் கடந்தாண்டு 2023 செப். 23-ம் தேதி இந்தியாவில் இருக்கிற மனிதநேயர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார். அது, உடல் உறுப்பு தானம் செய்வது என்பதாகும்.
What's Your Reaction?