“சீனாவுக்கு ‘செக்’ வைக்க இந்திய - அமெரிக்க உறவை வலுப்படுத்தும் ட்ரம்ப் நிர்வாகம்!”
இந்தியா உடனான உறவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் அதிகாரி லிசா கர்டிஸ், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு ‘செக்’ வைக்க இந்தியாவே சரியான நாடு என ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது என தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: இந்தியா உடனான உறவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் அதிகாரி லிசா கர்டிஸ், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு ‘செக்’ வைக்க இந்தியாவே சரியான நாடு என ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதை முன்னிட்டு வாஷிங்டன் டி.சி.யை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான தி சென்டர் ஃபார் எ நியூ அமெரிக்கன் செக்யூரிட்டி (சிஎன்ஏஎஸ்) செவ்வாயன்று நடத்திய ஆன்லைன் பத்திரிகையாளர் சந்திப்பில் லிசா கர்டிஸ் உரையாற்றினார். அப்போது அவர், “டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா உடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை மாற்றும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்பதையும், சீனாவை திறம்பட எதிர்கொள்வதற்கான ‘முக்கியமான கூட்டாளி’ இந்தியா என்பதையும் ட்ரம்ப் நிர்வாகம் அங்கீகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






