திரவ நைட்ரஜன் உணவு பொருள் விற்பனை... ஆய்வு செய்ய பறந்த உத்தரவு!

ஸ்மோக் பிஸ்கட்:கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் பொருள்காட்சியில் சிறுவன் ஒருவன் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்த ஒரு வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரவ நைட்ரஜன் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கட் போன்ற உணவு பொருள்கள் உடலுக்கு பல்வேறு தீங்குகள் விளைவிப்பதாக மருத்துவ ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஸ்மோக் பிஸ்கட்தமிழகத்திலும் பல்வேறு திருமண மற்றும் பொருட்காட்சி போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் உணவு பொருள்கள் பொதுமக்களுக்கு விரும்பி எடுத்துக்கொள்கிறார்கள். உடலுக்கு பல்வேறு தீங்கு ஏற்படுத்தும் இவ்வகை பொருள்களுக்கு தடை விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே வலுவாக எழுந்திருக்கிறது.திரவ நைட்ரஜனின் பயன்பாடு:மைனஸ் 190 டிகிரி செல்ஸியஸ் டெம்பரேசர் அளவு கொண்ட இந்த திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்களை குளிரூட்டவும், உறையவைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறும்போது அதன் தன்மை ஆபத்தாக மாறக்கூடியது என்கிறார்கள். இந்த நிலையில் அவ்வேதிப்பொருள் உடலுக்குள் செல்லும்போது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். அதிகபட்சமாக உடல் உறுப்புகளை உறையவைத்து மூச்சடைப்பு ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்து கூட ஏற்படக்கூடிய நிலையையும் உண்டாகக்கூடும்.திரவ நைட்ரஜன்உணவுப்பொருளில் உள்ள திரவ நைட்ரஜன் முழுவதும் வெளியேறிய பிறகு அந்த உணவை உட்கொண்டால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், அதிகளவு இருக்கும் நிலையில் அதனை உணவாக உட்கொண்டால் உடலில் திசுக்களை உறையவைக்க கூடிய ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். உடலுறுப்பு செயலிழக்கும் நிலைகூட ஏற்படக்கூடும். உணவை பதப்படுத்த பயன்படுத்திய வேதிப்பொருள் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.பறந்த உத்தரவு!தமிழகத்திலும் பல்வேறு இடங்களிலும் இவ்வகை உணவு விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகை உணவு விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி உணவு பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நகர் முழுவதும் ஆய்வு நடத்த சென்னை உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஸ்குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.தமிழ்நாடு அரசுதமிழ்நாடு முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி உணவு பொருள்கள் தயார் செய்யப்படுகிறதா, விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Apr 24, 2024 - 18:14
 0  4
திரவ நைட்ரஜன் உணவு பொருள் விற்பனை... ஆய்வு செய்ய பறந்த உத்தரவு!

ஸ்மோக் பிஸ்கட்:

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் பொருள்காட்சியில் சிறுவன் ஒருவன் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்த ஒரு வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரவ நைட்ரஜன் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கட் போன்ற உணவு பொருள்கள் உடலுக்கு பல்வேறு தீங்குகள் விளைவிப்பதாக மருத்துவ ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஸ்மோக் பிஸ்கட்

தமிழகத்திலும் பல்வேறு திருமண மற்றும் பொருட்காட்சி போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் உணவு பொருள்கள் பொதுமக்களுக்கு விரும்பி எடுத்துக்கொள்கிறார்கள். உடலுக்கு பல்வேறு தீங்கு ஏற்படுத்தும் இவ்வகை பொருள்களுக்கு தடை விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே வலுவாக எழுந்திருக்கிறது.

திரவ நைட்ரஜனின் பயன்பாடு:

மைனஸ் 190 டிகிரி செல்ஸியஸ் டெம்பரேசர் அளவு கொண்ட இந்த திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்களை குளிரூட்டவும், உறையவைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறும்போது அதன் தன்மை ஆபத்தாக மாறக்கூடியது என்கிறார்கள். இந்த நிலையில் அவ்வேதிப்பொருள் உடலுக்குள் செல்லும்போது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். அதிகபட்சமாக உடல் உறுப்புகளை உறையவைத்து மூச்சடைப்பு ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்து கூட ஏற்படக்கூடிய நிலையையும் உண்டாகக்கூடும்.

திரவ நைட்ரஜன்

உணவுப்பொருளில் உள்ள திரவ நைட்ரஜன் முழுவதும் வெளியேறிய பிறகு அந்த உணவை உட்கொண்டால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், அதிகளவு இருக்கும் நிலையில் அதனை உணவாக உட்கொண்டால் உடலில் திசுக்களை உறையவைக்க கூடிய ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். உடலுறுப்பு செயலிழக்கும் நிலைகூட ஏற்படக்கூடும். உணவை பதப்படுத்த பயன்படுத்திய வேதிப்பொருள் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பறந்த உத்தரவு!

தமிழகத்திலும் பல்வேறு இடங்களிலும் இவ்வகை உணவு விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகை உணவு விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி உணவு பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நகர் முழுவதும் ஆய்வு நடத்த சென்னை உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஸ்குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி உணவு பொருள்கள் தயார் செய்யப்படுகிறதா, விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist