தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக கிருஷ்ணகிரியில் மத்திய நதி நீர் ஆணையக்குழு ஆய்வு
தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மத்திய நதி நீர் ஆணையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மத்திய நதி நீர் ஆணையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ளநந்தி மலையில் (நந்தி துர்க்கம்)தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகி 432 கிமீ தூரம் பயணிக்கிறது. இதில், கர்நாடக மாநிலத்தில் 112 கிமீ தொலைவும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் 180 கிமீ தொலைவும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் 34 கிமீ தொலைவும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 106 கிமீ தொலைவுபயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
What's Your Reaction?