பேச்சுவார்த்தையில் உடன்பாடு: துறைமுக ஊழியர்களுக்கு 8.5 சதவீதம் ஊதிய உயர்வு

மும்பை, சென்னை, தூத்துக்குடி கொல்கத்தா, கோவா உட்பட 12 துறைமுகங்களில் அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் என18,000 பேர் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனர்.

Aug 30, 2024 - 10:17
 0  3
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: துறைமுக ஊழியர்களுக்கு 8.5 சதவீதம் ஊதிய உயர்வு

சென்னை: மும்பை, சென்னை, தூத்துக்குடி கொல்கத்தா, கோவா உட்பட 12 துறைமுகங்களில் அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் என18,000 பேர் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்வு வழங்கப்படுவதுவழக்கம்.

கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். ஆனால், 31 மாதங்களாகக் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், துறைமுக சரக்குகள் முனையத்தில் தனியார்மயமாக்கல் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.28-ம் தேதிமுதல் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 5 தொழிற்சங்கங்கள் கடந்த 26-ம் தேதி அறிவித்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist