`தானாக வருவார்கள்..!’ - அணிசேரும் வியூகம்தான் அதிமுக-வின் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பா?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதிக்குள் வரும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க 72,188 வாக்குகளும், அ.தி.மு.க 65,365 வாக்குகளும், பா.ம.க 32,198 வாக்குகளும் பெற்று இருந்தது. அ.தி.மு.க-வை பொறுத்தவரை 2021 சட்டமன்றத் தேர்தலைவிட இது முன்னேற்றம்தான். ஆனால், இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாமல் விலகி இருப்பது கட்சிக்குள்ளாகவே பல்வேறு சந்தேகங்களை, விவாதங்களை எழுப்பி இருக்கிறது. அதிமுக ஆலோசனை கூட்டம்இதுதொடர்பாக அ.தி.மு.க அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்."விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஆளும் திமுக, அதிகார பலத்தோடு அணுகுகிறது. அதனால்தான், முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்து, ஒரு ஒன்றியத்துக்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் பொறுப்பாளர்களை நியமித்து வேலையை தொடங்கிவிட்டது. எனவே, அ.தி.மு.க-வுக்கு குறைந்தப்பட்சம் கூட்டணி பலமாவது இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதன்படிதான், பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர ஒருபக்கம் முயற்சி நடந்தது. ஆனால், இடைத்தேர்தலில் போட்டியிட பா.ம.க-வுக்கு டெல்லி பா.ஜ.க தலைமையிடமிருந்து உத்தரவு வந்து இருக்கும்போல. அதனால்தான், 13 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலில் பா.ம.க நேரடியாக களமிறங்கி இருக்கிறது. இப்படி கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடக்கும்போதே பா.ம.க போட்டியிடபோவதாக பா.ஜ.க அறிவித்துவிட்டதால், கூட்டணி இல்லாமல் தேர்தலில் களமிறங்குவது தவறான முடிவு என எடப்பாடி நினைத்துவிட்டார். ராமதாஸ், அன்புமணிஅதேபோல, தற்போதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்காரர்களின் பசையும் செலவாகிபோனதால், வளமான துறையை கவனித்த மாஜிக்களும் செலவு செய்ய தயாராக இல்லை. டெபாசிட் வாங்கவே அதிகமான இனிப்புகளை இறக்கவேண்டும் என்பதால், எடப்பாடிக்கும் இடைத்தேர்தலில் ஆர்வம் இல்லாமல் போனது.இதுதொடர்பாக ஜூன் 15-ம் தேதியன்று எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற சம்பரதாய ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி தனது முடிவை அறிவித்ததும் சீனியர்களும் ஓகே சொல்லிவிட்டனர். '2009-ல் அம்மாவே இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறார்கள்' என்று எடப்பாடி சொல்லி சமாளித்தாலும், கட்சிக்குள் இதை ஏற்கும் மனநிலையில் யாருமே இல்லை. ஏனென்றால், அப்போது மூன்றாவது அணி என்ற ஒன்று இல்லவே இல்லை. ஆனால், தற்போது பா.ஜ.க பா.ம.க பலத்தோடு பெரிய கட்சி என்று விளம்பரம் செய்து வருகிறது.ராமதாஸ், எடப்பாடி பழனிசாமிஇந்நிலையில், அந்த கூட்டணிக்கு வழிவிடுவதுபோல, எடப்பாடி முடிவு எடுத்து இருக்கிறார். ஆனால், இதில் ஒரு சூட்சமம் இருப்பதாக தலைமையில் இருந்து சொல்லப்படுகிறது. அதாவது, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க, கடந்த முறையைவிட குறைவான வாக்குகளே பெற்று, மாநில கட்சி அங்கிகாரத்தை பெற முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில், இடைத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் களமிறங்கி ஆளும் கட்சியோடு மோதி, மீண்டும் மூக்கு உடைந்தால், அ.தி.மு.க-வை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. நாம் சொல்வதைவிட, அவர்களாகவே உணர்ந்துக் கொண்டால் தாமாக வழிக்கு வந்துவிடுவார்கள் என்று தலைமை எண்ணுகிறது. கூட்டணிக்கு பாஜக வரவில்லையென்றாலும், பா.ம.க வந்தே தீரும் என்று தலைமை எண்ணுகிறது." என்றனர் விரிவாக.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதிக்குள் வரும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க 72,188 வாக்குகளும், அ.தி.மு.க 65,365 வாக்குகளும், பா.ம.க 32,198 வாக்குகளும் பெற்று இருந்தது. அ.தி.மு.க-வை பொறுத்தவரை 2021 சட்டமன்றத் தேர்தலைவிட இது முன்னேற்றம்தான். ஆனால், இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடாமல் விலகி இருப்பது கட்சிக்குள்ளாகவே பல்வேறு சந்தேகங்களை, விவாதங்களை எழுப்பி இருக்கிறது.
இதுதொடர்பாக அ.தி.மு.க அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.
"விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஆளும் திமுக, அதிகார பலத்தோடு அணுகுகிறது. அதனால்தான், முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்து, ஒரு ஒன்றியத்துக்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் பொறுப்பாளர்களை நியமித்து வேலையை தொடங்கிவிட்டது. எனவே, அ.தி.மு.க-வுக்கு குறைந்தப்பட்சம் கூட்டணி பலமாவது இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதன்படிதான், பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர ஒருபக்கம் முயற்சி நடந்தது.
ஆனால், இடைத்தேர்தலில் போட்டியிட பா.ம.க-வுக்கு டெல்லி பா.ஜ.க தலைமையிடமிருந்து உத்தரவு வந்து இருக்கும்போல. அதனால்தான், 13 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலில் பா.ம.க நேரடியாக களமிறங்கி இருக்கிறது. இப்படி கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடக்கும்போதே பா.ம.க போட்டியிடபோவதாக பா.ஜ.க அறிவித்துவிட்டதால், கூட்டணி இல்லாமல் தேர்தலில் களமிறங்குவது தவறான முடிவு என எடப்பாடி நினைத்துவிட்டார்.
அதேபோல, தற்போதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்காரர்களின் பசையும் செலவாகிபோனதால், வளமான துறையை கவனித்த மாஜிக்களும் செலவு செய்ய தயாராக இல்லை. டெபாசிட் வாங்கவே அதிகமான இனிப்புகளை இறக்கவேண்டும் என்பதால், எடப்பாடிக்கும் இடைத்தேர்தலில் ஆர்வம் இல்லாமல் போனது.
இதுதொடர்பாக ஜூன் 15-ம் தேதியன்று எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற சம்பரதாய ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி தனது முடிவை அறிவித்ததும் சீனியர்களும் ஓகே சொல்லிவிட்டனர். '2009-ல் அம்மாவே இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறார்கள்' என்று எடப்பாடி சொல்லி சமாளித்தாலும், கட்சிக்குள் இதை ஏற்கும் மனநிலையில் யாருமே இல்லை. ஏனென்றால், அப்போது மூன்றாவது அணி என்ற ஒன்று இல்லவே இல்லை. ஆனால், தற்போது பா.ஜ.க பா.ம.க பலத்தோடு பெரிய கட்சி என்று விளம்பரம் செய்து வருகிறது.
இந்நிலையில், அந்த கூட்டணிக்கு வழிவிடுவதுபோல, எடப்பாடி முடிவு எடுத்து இருக்கிறார். ஆனால், இதில் ஒரு சூட்சமம் இருப்பதாக தலைமையில் இருந்து சொல்லப்படுகிறது. அதாவது, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க, கடந்த முறையைவிட குறைவான வாக்குகளே பெற்று, மாநில கட்சி அங்கிகாரத்தை பெற முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில், இடைத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் களமிறங்கி ஆளும் கட்சியோடு மோதி, மீண்டும் மூக்கு உடைந்தால், அ.தி.மு.க-வை தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. நாம் சொல்வதைவிட, அவர்களாகவே உணர்ந்துக் கொண்டால் தாமாக வழிக்கு வந்துவிடுவார்கள் என்று தலைமை எண்ணுகிறது. கூட்டணிக்கு பாஜக வரவில்லையென்றாலும், பா.ம.க வந்தே தீரும் என்று தலைமை எண்ணுகிறது." என்றனர் விரிவாக.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?