`நிமிர்ந்து நடக்கக்கூட முடியாத நிலையில், மத்தியில் அரசு உள்ளது!' - வயநாட்டில் ராகுல் கிண்டல்!

வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து 2-வது முறையாக எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று கேரளா சென்றார். வயநாட்டில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "இந்த தேர்தலில் கேரளாவில் பெரிய வெற்றிகொடுத்த காங்கிரஸ் கூட்டணி நிர்வாகிகளுக்கும், சில இடங்களில் ஆதரவளித்த சி.பி.எம் கூட்டணி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் எனக்கு பரிபூர்ணமான ஆதரவு அளித்துள்ளனர். நான் இந்த நாடு முழுவதும் பயணித்துக்கொண்டிருந்தேன். அந்த காலங்களில் வயநாடு மக்கள் முழுவதுமாக என்னை ஆதரித்தனர். அமலாக்கத்துறை 55 மணி நேரம் என்னை விசாரித்தபோது வயநாடு மக்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். பாஜக எனக்கு 2 வருடம் சிறைத் தண்டனை அளித்தபோதும், நாடு முழுவதும் 20-க்கும் அதிகமான வழக்குகளை என்மீது பதிந்தபோதும் வயநாட்டின் ஒவ்வொரு மக்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். தேர்தல் தொடங்கும் முன்பு 400-க்கும் அதிகமான சீட்டுகளை பெறுவோம் என்றது பா.ஜ.க. தேர்தல் அறிவித்து ஒரு மாதம் கடந்து 300-க்கும் அதிகமான சீட்டுகளில் வெல்வோம் என்றார்கள். அதன் பிறகு 200-க்கும் அதிகமான சீட்டுகளை பெறுவோம் என்றார்கள். அனைத்து மீடியாக்களும் இந்தியா கூட்டணிக்கு எதிராக இருந்தன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் இந்தியா கூட்டணிக்கு எதிராக செயல்பட்டன. பிரதமரின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தேர்தல் கமிஷன் செயல்பட்டது. மாதக்கணக்கில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் இறுதியில்தான் வாரணாசி தேர்தல் நடைபெறும்படி தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது. தேர்தல் காலத்தில் மிகப்பெரிய நாடகங்கள் அரங்கேறின. இறுதியாக பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் தேர்தல் நடக்கும்படி தீர்மானித்திருந்தார்கள்.வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்திபிரதமர் நரேந்திர மோடி தேர்தலின் கடைசி மூன்று நாட்கள் கன்னியாகுமரிக்கு சென்று தியானம் செய்தார். இறுதி தேர்தல் சமயத்தில்  பிரச்சாரம் செய்யக்ன் கூடாது என அனைவரிடமும் கூறினார்கள். ஆனால், பிரதமர் அந்த நாட்களில் நாட்டின் அனைத்து மீடியாக்களிலும் நிறைந்திருந்தார். ஆனாலும், அவர் வாரணாசியில் கஷ்டப்பட்டுதான் வெற்றிபெற்றார். அதுமட்டும் அல்ல பா.ஜ.க அயோத்தியிலும் தோற்றுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உத்தரபிரதேசத்திலும் தோல்வியடைந்துள்ளனர். இந்தியா என்ற கொள்கை மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால்தான் அவர்கள் தோல்வியடைந்தார்கள். நம்முடைய அரசியலமைப்பில் இந்தியா என்பது மாநிலங்களின் யூனியனாகும். பல மாநிலங்களின், பாரம்பர்யங்கள்,  சரித்திரங்களின், மொழிகளின் கூட்டமைப்புதான் இந்தியா. கேரளாவில் மலையாளம், தமிழ்நாட்டில் தமிழ் என தனித்தனி மொழிகள் உண்டு. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு சரித்திரம் உண்டு. இவை அனைத்தையும் மதிக்க வேண்டும். இந்தியா என்ற கொள்கை மற்றவர்களை பெருமைப்படுத்துவது ஆகும். மற்றவர்களை பெருமைப்படுத்துவதன் அடி ஆழம் என்பது இந்திய அரசியலமைப்பாகும்.ராகுல் காந்திஇந்தியாவின் அரசியலமைப்பு என்பது நம் நாட்டின் கொள்கைகள், கலாசாரம்,  பாரம்பர்யம் உள்ளிட்டவைகளின் ஒட்டுமொத்த வடிவமாகும். நாட்டின் அனைத்து சரித்திரங்களுக்கும், அனைத்து சமூகங்களுக்கும், எல்லா பாரம்பர்யங்களுக்கும் சம மதிப்பு வழங்குவது இந்தியாவின் அரசியலமைப்பு ஆகும். கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு மீது பா.ஜக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துக்கு எதிராக போராட தூண்டும்போதும் பா.ஜ.க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஒரு கொள்கை, ஒரு மொழி, ஒரு கலாசாரத்தையும் பா.ஜ.க திணிக்க முயலும்போது அவர்கள் அரசியலமைப்புமீது தாக்குதல் நடத்துகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை இல்லாமல் ஆக்குவோம் என்று தேர்தலுக்கு முன் பா.ஜ.க தலைவர்கள் சொன்னார்கள். 400-க்கும் அதிகமான சீட்டுகள் எங்களுக்கு வேண்டும் என்று பா.ஜ.க கூறியதன் பின்னால் உள்ள ஒரே லட்சியம் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவது என்பதாகத்தான் இருந்தது.வயநாடு பொதுக்கூட்டத்தில்இந்த நூற்றாண்டு காட்சிகளின் நூற்றாண்டாகும். ஓவியங்களையும், தொலைக்காட்சிகளையும் பார்க்கும் நூற்றாண்டில் நாம் வாழ்ந்துகொண்டிருகிறோம். அப்படி நாம் பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு. அ ரசியலமைப்பை மாற்றுவோம் எனக்கூறிய பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியலமைப்பை தலையில் வைத்து வணங்கிய காட்சியை நாம் பார்த்தோம். அதன்மூலம் நாட்டுமக்கள் பிரதமருக்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர். இந்தியாவின் அரசியலமைப்பை தொட்டு விளையாட நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்ற செய்திதான் அது. அதிகப்படியான பிரச்னைகளுக்கு மத்தியில் உள்ள ஒரு அரசுதான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. இந்தியா கூட்டணியால் பலத்த அடி வாங்கிய அரசு அதிகாரத்தில் உள்ளது. அதனால் நிமிர்ந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ள அரசுதான் மத்தியில் உள்ளது. இன்று அதிகாரத்தில் இருப்பது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் அரசு அல்ல. இந்த தேர்தலில் காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் இணைந்து நரேந்திர மோடியின் கொள்கைகளை முழுமையாக தோல்வியடையச் செய்துள்ளது. இன்று நீங்கள் பார்க்கும் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்பு நாம் பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்ட நரேந்திர மோடியாவார்" என்றார்.Rahul: `வயநாட்டைவிட்டு ராகுல் செல்வது வருத்தமாக உள்ளது' - கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கவலை!

Jun 13, 2024 - 11:47
 0  3
`நிமிர்ந்து நடக்கக்கூட முடியாத நிலையில், மத்தியில் அரசு உள்ளது!' - வயநாட்டில் ராகுல் கிண்டல்!

வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து 2-வது முறையாக எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று கேரளா சென்றார். வயநாட்டில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "இந்த தேர்தலில் கேரளாவில் பெரிய வெற்றிகொடுத்த காங்கிரஸ் கூட்டணி நிர்வாகிகளுக்கும், சில இடங்களில் ஆதரவளித்த சி.பி.எம் கூட்டணி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் எனக்கு பரிபூர்ணமான ஆதரவு அளித்துள்ளனர். நான் இந்த நாடு முழுவதும் பயணித்துக்கொண்டிருந்தேன். அந்த காலங்களில் வயநாடு மக்கள் முழுவதுமாக என்னை ஆதரித்தனர். அமலாக்கத்துறை 55 மணி நேரம் என்னை விசாரித்தபோது வயநாடு மக்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். பாஜக எனக்கு 2 வருடம் சிறைத் தண்டனை அளித்தபோதும், நாடு முழுவதும் 20-க்கும் அதிகமான வழக்குகளை என்மீது பதிந்தபோதும் வயநாட்டின் ஒவ்வொரு மக்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். தேர்தல் தொடங்கும் முன்பு 400-க்கும் அதிகமான சீட்டுகளை பெறுவோம் என்றது பா.ஜ.க. தேர்தல் அறிவித்து ஒரு மாதம் கடந்து 300-க்கும் அதிகமான சீட்டுகளில் வெல்வோம் என்றார்கள். அதன் பிறகு 200-க்கும் அதிகமான சீட்டுகளை பெறுவோம் என்றார்கள். அனைத்து மீடியாக்களும் இந்தியா கூட்டணிக்கு எதிராக இருந்தன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் இந்தியா கூட்டணிக்கு எதிராக செயல்பட்டன. பிரதமரின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தேர்தல் கமிஷன் செயல்பட்டது. மாதக்கணக்கில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் இறுதியில்தான் வாரணாசி தேர்தல் நடைபெறும்படி தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது. தேர்தல் காலத்தில் மிகப்பெரிய நாடகங்கள் அரங்கேறின. இறுதியாக பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் தேர்தல் நடக்கும்படி தீர்மானித்திருந்தார்கள்.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலின் கடைசி மூன்று நாட்கள் கன்னியாகுமரிக்கு சென்று தியானம் செய்தார். இறுதி தேர்தல் சமயத்தில்  பிரச்சாரம் செய்யக்ன் கூடாது என அனைவரிடமும் கூறினார்கள். ஆனால், பிரதமர் அந்த நாட்களில் நாட்டின் அனைத்து மீடியாக்களிலும் நிறைந்திருந்தார். ஆனாலும், அவர் வாரணாசியில் கஷ்டப்பட்டுதான் வெற்றிபெற்றார். அதுமட்டும் அல்ல பா.ஜ.க அயோத்தியிலும் தோற்றுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உத்தரபிரதேசத்திலும் தோல்வியடைந்துள்ளனர். இந்தியா என்ற கொள்கை மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால்தான் அவர்கள் தோல்வியடைந்தார்கள். நம்முடைய அரசியலமைப்பில் இந்தியா என்பது மாநிலங்களின் யூனியனாகும். பல மாநிலங்களின், பாரம்பர்யங்கள்,  சரித்திரங்களின், மொழிகளின் கூட்டமைப்புதான் இந்தியா. கேரளாவில் மலையாளம், தமிழ்நாட்டில் தமிழ் என தனித்தனி மொழிகள் உண்டு. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒவ்வொரு சரித்திரம் உண்டு. இவை அனைத்தையும் மதிக்க வேண்டும். இந்தியா என்ற கொள்கை மற்றவர்களை பெருமைப்படுத்துவது ஆகும். மற்றவர்களை பெருமைப்படுத்துவதன் அடி ஆழம் என்பது இந்திய அரசியலமைப்பாகும்.

ராகுல் காந்தி

இந்தியாவின் அரசியலமைப்பு என்பது நம் நாட்டின் கொள்கைகள், கலாசாரம்,  பாரம்பர்யம் உள்ளிட்டவைகளின் ஒட்டுமொத்த வடிவமாகும். நாட்டின் அனைத்து சரித்திரங்களுக்கும், அனைத்து சமூகங்களுக்கும், எல்லா பாரம்பர்யங்களுக்கும் சம மதிப்பு வழங்குவது இந்தியாவின் அரசியலமைப்பு ஆகும். கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு மீது பா.ஜக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துக்கு எதிராக போராட தூண்டும்போதும் பா.ஜ.க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஒரு கொள்கை, ஒரு மொழி, ஒரு கலாசாரத்தையும் பா.ஜ.க திணிக்க முயலும்போது அவர்கள் அரசியலமைப்புமீது தாக்குதல் நடத்துகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை இல்லாமல் ஆக்குவோம் என்று தேர்தலுக்கு முன் பா.ஜ.க தலைவர்கள் சொன்னார்கள். 400-க்கும் அதிகமான சீட்டுகள் எங்களுக்கு வேண்டும் என்று பா.ஜ.க கூறியதன் பின்னால் உள்ள ஒரே லட்சியம் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவது என்பதாகத்தான் இருந்தது.

வயநாடு பொதுக்கூட்டத்தில்

இந்த நூற்றாண்டு காட்சிகளின் நூற்றாண்டாகும். ஓவியங்களையும், தொலைக்காட்சிகளையும் பார்க்கும் நூற்றாண்டில் நாம் வாழ்ந்துகொண்டிருகிறோம். அப்படி நாம் பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு. அ ரசியலமைப்பை மாற்றுவோம் எனக்கூறிய பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியலமைப்பை தலையில் வைத்து வணங்கிய காட்சியை நாம் பார்த்தோம். அதன்மூலம் நாட்டுமக்கள் பிரதமருக்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர். இந்தியாவின் அரசியலமைப்பை தொட்டு விளையாட நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்ற செய்திதான் அது. அதிகப்படியான பிரச்னைகளுக்கு மத்தியில் உள்ள ஒரு அரசுதான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. இந்தியா கூட்டணியால் பலத்த அடி வாங்கிய அரசு அதிகாரத்தில் உள்ளது. அதனால் நிமிர்ந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ள அரசுதான் மத்தியில் உள்ளது. இன்று அதிகாரத்தில் இருப்பது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் அரசு அல்ல. இந்த தேர்தலில் காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் இணைந்து நரேந்திர மோடியின் கொள்கைகளை முழுமையாக தோல்வியடையச் செய்துள்ளது. இன்று நீங்கள் பார்க்கும் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்பு நாம் பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்ட நரேந்திர மோடியாவார்" என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist