`நீங்கள்தானே என்னைத் தோற்கடித்தீர்கள்' - நவீன் பட்நாயக் மீண்டும் சட்டசபை சென்றபோது... நெகிழ்ச்சி!
ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தோல்வியைக் காணாத நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு ஆட்சியை இழந்தது. அதோடு, தொடர்ச்சியாக ஐந்து முறை முதல்வராக இருந்த பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக், தான் போட்டியிட்ட ஹிஞ்சிலி மற்றும் காந்தபாஞ்சி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் காந்தபாஞ்சியில் பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியுமடைந்தார். ஹிஞ்சிலி சட்டமன்றத் தொகுதியில்கூட 4,636 வாக்குகள் வித்தியாசத்தில்தான் நவீன் பட்நாயக் வெற்றிபெற்றார்.முதல்வர் மோகன் சரண் மஜி - முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்இன்னொருபக்கம், 78 இடங்களை வென்ற பா.ஜ.க ஒடிசா வரலாற்றில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மஜி என்பவரை முதல்வராகவும் அரியணையேற்றியது. இந்த நிலையில், ஒடிசா சட்டமன்றத்துக்குள் நேற்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்றுக்கொண்டபோது ஒரு நெகிழ்வான நிகழ்வு அரங்கேறியது.புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 82 எம்.எல்.ஏ-ஏக்கள் உட்பட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பதவிப் பிரமாணம் முடிந்த பிறகு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அவையிலிருந்து கிளம்பினார். அப்போது, காந்தபாஞ்சி தொகுதியில் அவரை வீழ்த்தி முதல்முறையாக எம்.எல்.ஏ-வான பா.ஜ.க அமைச்சர் லக்ஷ்மண் பாக், நவீன் பட்நாயக் அருகில் வந்தபோது எழுந்து நின்று கைகூப்பி வணங்கி `எப்படி இருக்கிறீர்கள்' என நலம் விசாரித்தபடி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.Naveen Patnaik & CM Mohan Majhi greet each other in assembly. Beautiful Video pic.twitter.com/6BL21FAZP5— Times Algebra (@TimesAlgebraIND) June 18, 2024 அப்போது, `ஓ நீங்கள் தானே என்னைத் தோற்கடித்தீர்கள்' என்று கூறிய நவீன் பட்நாயக் அவரை வாழ்த்திச் சென்றார். மறுபக்கம், அவையில் முதல்வர் மோகன் சரண் மஜி உட்பட அனைவரும் எழுந்து நின்று 24 ஆண்டுகாலம் முதல்வராகப் பணியாற்றிய நவீன் பட்நாயக்குக்கு மரியாதை செய்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e8824 வருட நவீன் பட்நாயக் ஆட்சி... முடிவுரை எழுதிய மோகன் சரண் மஜி!
ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தோல்வியைக் காணாத நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு ஆட்சியை இழந்தது. அதோடு, தொடர்ச்சியாக ஐந்து முறை முதல்வராக இருந்த பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக், தான் போட்டியிட்ட ஹிஞ்சிலி மற்றும் காந்தபாஞ்சி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் காந்தபாஞ்சியில் பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியுமடைந்தார். ஹிஞ்சிலி சட்டமன்றத் தொகுதியில்கூட 4,636 வாக்குகள் வித்தியாசத்தில்தான் நவீன் பட்நாயக் வெற்றிபெற்றார்.
இன்னொருபக்கம், 78 இடங்களை வென்ற பா.ஜ.க ஒடிசா வரலாற்றில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மஜி என்பவரை முதல்வராகவும் அரியணையேற்றியது. இந்த நிலையில், ஒடிசா சட்டமன்றத்துக்குள் நேற்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்றுக்கொண்டபோது ஒரு நெகிழ்வான நிகழ்வு அரங்கேறியது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 82 எம்.எல்.ஏ-ஏக்கள் உட்பட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பதவிப் பிரமாணம் முடிந்த பிறகு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அவையிலிருந்து கிளம்பினார். அப்போது, காந்தபாஞ்சி தொகுதியில் அவரை வீழ்த்தி முதல்முறையாக எம்.எல்.ஏ-வான பா.ஜ.க அமைச்சர் லக்ஷ்மண் பாக், நவீன் பட்நாயக் அருகில் வந்தபோது எழுந்து நின்று கைகூப்பி வணங்கி `எப்படி இருக்கிறீர்கள்' என நலம் விசாரித்தபடி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அப்போது, `ஓ நீங்கள் தானே என்னைத் தோற்கடித்தீர்கள்' என்று கூறிய நவீன் பட்நாயக் அவரை வாழ்த்திச் சென்றார். மறுபக்கம், அவையில் முதல்வர் மோகன் சரண் மஜி உட்பட அனைவரும் எழுந்து நின்று 24 ஆண்டுகாலம் முதல்வராகப் பணியாற்றிய நவீன் பட்நாயக்குக்கு மரியாதை செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?