Met Gala 2024 | கவர்ந்திழுக்கும் ஆடைகள் அணிந்து பிரபலங்கள் சங்கமித்த ஓர் ஃபேஷன் இரவு
ஃபேஷன் ஆர்வலர்கள் சங்கமிக்கும் நிகழ்வாக அமைகிறது மெட் காலா. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிகழ்வுக்கு அவர்கள் அணிந்து வரும் ஆடை தான் பேசுபொருளாக அமையும்.
நியூயார்க்: ஃபேஷன் ஆர்வலர்கள் சங்கமிக்கும் நிகழ்வாக அமைகிறது மெட் காலா. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிகழ்வுக்கு அவர்கள் அணிந்து வரும் ஆடை தான் பேசுபொருளாக அமையும்.
கடந்த 1948-ல் மெட் காலா தொடங்கப்பட்டது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் திங்கள்கிழமையின் இரவில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஃபேஷன் ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்பார்கள். அவர்கள் அணிந்து வரும் புதுமையான ஆடைகள் பலரையும் ஈர்க்கும். நிதி திரட்டும் முயற்சியாக இது தொடங்கப்பட்டது.
What's Your Reaction?