ஜெகன் மோகனுக்கு மேலும் பின்னடைவு... ராஜினாமா செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - என்ன நடக்கிறது?!

ஆந்திரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலுலும் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்திலும் பா.ஜ.க-வுக்கு நெருங்கிய தோழமை கட்சியாக உள்ளது. இதற்கிடையில், நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கும் பீகாருக்கும், ஆந்திராவுக்கும் நிதி ஒதுக்கீடில் தனி கவனம் செலுத்தியது பா.ஜ.க.Union Budget | மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அந்தக் கட்சியின் இரண்டு ராஜ்ய சபா எம்.பி-க்களான, மோபிதேவி வெங்கடரமணா, பேடா மஸ்தான் ராவ் ஆகியோர் கட்சியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை, துணைத் தலைவரும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.மேலும், அவர்கள் இருவரும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததாகவும், விரைவில் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியில் சேர வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இருவரும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படலாம் எனவும் விவரமறிந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88Parvathy Thiruvothu: `திரைப்படச் சங்கத்தினர் பதவி விலகியது கோழைத்தனமானது..' - தங்கலான் பார்வதி சாடல்

Aug 30, 2024 - 10:17
 0  4
ஜெகன் மோகனுக்கு மேலும் பின்னடைவு... ராஜினாமா செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - என்ன நடக்கிறது?!

ஆந்திரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலுலும் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்திலும் பா.ஜ.க-வுக்கு நெருங்கிய தோழமை கட்சியாக உள்ளது.

இதற்கிடையில், நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கும் பீகாருக்கும், ஆந்திராவுக்கும் நிதி ஒதுக்கீடில் தனி கவனம் செலுத்தியது பா.ஜ.க.

Union Budget | மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்

இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அந்தக் கட்சியின் இரண்டு ராஜ்ய சபா எம்.பி-க்களான, மோபிதேவி வெங்கடரமணா, பேடா மஸ்தான் ராவ் ஆகியோர் கட்சியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்களின் ராஜினாமா கடிதத்தை, துணைத் தலைவரும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மேலும், அவர்கள் இருவரும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததாகவும், விரைவில் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியில் சேர வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இருவரும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படலாம் எனவும் விவரமறிந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist