Rahul Gandhi: `வெள்ளை டி-ஷர்ட் அரசியல்... ராகுலின் போக்கே மாறிவிட்டது!' - ஸ்மிருதி இரானி ஓப்பன் டாக்

2014-ல் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டதிலிருந்து ராகுல் காந்திக்கும் ஸ்மிருதி இரானிக்கும் நேரடி வார்த்தை மோதல் தொடங்கியது. அப்போதிலிருந்து ராகுல் காந்திக்கும் - ஸ்மிருதி இரானிக்கும் தொடர்ந்து வரும் மோதல், அரசியல் வட்டாரத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வியை தழுவிய ஸ்மிருதி இரானி ஊடக வெளிச்சத்திலிருந்தும் காணாமல் போனார். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார்.अब स्मृति ईरानी भी राहुल गांधी की फैन। राहुल गांधी अब अलग राजनीति कर रहे हैं, उनमें बदलाव आया है।◆ बीजेपी की पूर्व सांसद स्मृति ईरानी ने कहा। #SmritiIrani ने अब अमेठी में हार के बाद अपने सुर बदल दिए हैं। कांग्रेस के एक छोटे से कार्यकर्ता ने लोकसभा में उन्हें हरा दिया और अब… pic.twitter.com/AcJxm2lFTk— Aviator Amarnath Kumar (@aviatoramarnath) August 29, 2024 அதில், ``ராகுல் காந்தி குறிப்பிட்ட மக்களை நோக்கி, திட்டமிட்டு தெளிவாக அரசியல் செய்கிறார். அவர் நடைபயணம் மேற்கொண்டபோது, கோயில்களுக்குச் சென்று வழிபட்டார். ஆனால், அதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர் ஏமாற்றுகிறார் என்பதை உணர்ந்தார்கள். அதே நேரம் ராகுல் காந்தி, இந்த அரசியல் போக்கு வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்து, அவரின் அரசியலை வேறு மாதிரியாக மாற்றிக்கொண்டார். சாதி குறித்து நாடாளுமன்றத்தில் பேசும்போது, அவர் வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருந்தார். அது எந்த மாதிரியான செய்தியாக இளைஞர்களிடம் சென்று சேரும் என்பது அவருக்கு நன்றாக புரிந்திருக்கிறது.அவர் செய்யும் செயல்கள் நல்லவையாகவோ, அல்லது கெட்டதாகவோ, முதிர்ச்சியற்றதாகவோ நாம் தவறாக விளங்கிக்கொள்ளக் கூடாது. அதில் அவர் வித்தியாசமான அரசியலை முன்னெடுக்கிறார். அவரை குறைத்து மதிப்பிடக் கூடாது. அவருடைய இந்த தேர்தல் வெற்றிக்கான காரணம், அவர் தோல்வியடைந்த யுக்திகளை விட்டுவிலகி வேறுமாதிரியான அரசியலை முன்னிலைப்படுத்தியதுதான்.ராகுல் காந்தி அமேதியில் தோற்றத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதற்கு முன்பு 2004-ல் சாந்தினி சௌக் தொகுதியிலும், 2014-தேர்தலிலும் தோல்வியடைந்திருக்கிறேன். அடல் பிஹாரி வாஜ்பாய் கூட தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார். மோடி மட்டும் இதுவரை தோல்வியடையவில்லை. தேர்தல் வரும், போகும். ஆனால், ஒரு லட்சம் குடும்பங்கள் இப்போது சொந்த வீடுகளில் வாழ்கின்றன. 80,000 வீடுகளுக்கு இப்போது மின்சாரம் கிடைத்திருக்கிறது. இரண்டு லட்சம் குடும்பங்கள் முதல் முறையாக கேஸ் சிலிண்டர் இணைப்பைப் பெற்றிருக்கின்றன என்பதே எனது உண்மையான வெற்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.Kolkata case: `பிண அரசியல் செய்யும் பாஜக.. சிபிஐ வசம் சென்று 16 நாள்கள் ஆகின்றன எங்கே நீதி?' - மம்தா

Aug 30, 2024 - 10:17
 0  3
Rahul Gandhi: `வெள்ளை டி-ஷர்ட் அரசியல்... ராகுலின் போக்கே மாறிவிட்டது!' - ஸ்மிருதி இரானி ஓப்பன் டாக்

2014-ல் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டதிலிருந்து ராகுல் காந்திக்கும் ஸ்மிருதி இரானிக்கும் நேரடி வார்த்தை மோதல் தொடங்கியது. அப்போதிலிருந்து ராகுல் காந்திக்கும் - ஸ்மிருதி இரானிக்கும் தொடர்ந்து வரும் மோதல், அரசியல் வட்டாரத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வியை தழுவிய ஸ்மிருதி இரானி ஊடக வெளிச்சத்திலிருந்தும் காணாமல் போனார். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார்.

அதில், ``ராகுல் காந்தி குறிப்பிட்ட மக்களை நோக்கி, திட்டமிட்டு தெளிவாக அரசியல் செய்கிறார். அவர் நடைபயணம் மேற்கொண்டபோது, கோயில்களுக்குச் சென்று வழிபட்டார். ஆனால், அதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர் ஏமாற்றுகிறார் என்பதை உணர்ந்தார்கள். அதே நேரம் ராகுல் காந்தி, இந்த அரசியல் போக்கு வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்து, அவரின் அரசியலை வேறு மாதிரியாக மாற்றிக்கொண்டார். சாதி குறித்து நாடாளுமன்றத்தில் பேசும்போது, அவர் வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருந்தார். அது எந்த மாதிரியான செய்தியாக இளைஞர்களிடம் சென்று சேரும் என்பது அவருக்கு நன்றாக புரிந்திருக்கிறது.

அவர் செய்யும் செயல்கள் நல்லவையாகவோ, அல்லது கெட்டதாகவோ, முதிர்ச்சியற்றதாகவோ நாம் தவறாக விளங்கிக்கொள்ளக் கூடாது. அதில் அவர் வித்தியாசமான அரசியலை முன்னெடுக்கிறார். அவரை குறைத்து மதிப்பிடக் கூடாது. அவருடைய இந்த தேர்தல் வெற்றிக்கான காரணம், அவர் தோல்வியடைந்த யுக்திகளை விட்டுவிலகி வேறுமாதிரியான அரசியலை முன்னிலைப்படுத்தியதுதான்.

ராகுல் காந்தி

அமேதியில் தோற்றத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதற்கு முன்பு 2004-ல் சாந்தினி சௌக் தொகுதியிலும், 2014-தேர்தலிலும் தோல்வியடைந்திருக்கிறேன். அடல் பிஹாரி வாஜ்பாய் கூட தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார். மோடி மட்டும் இதுவரை தோல்வியடையவில்லை. தேர்தல் வரும், போகும். ஆனால், ஒரு லட்சம் குடும்பங்கள் இப்போது சொந்த வீடுகளில் வாழ்கின்றன. 80,000 வீடுகளுக்கு இப்போது மின்சாரம் கிடைத்திருக்கிறது. இரண்டு லட்சம் குடும்பங்கள் முதல் முறையாக கேஸ் சிலிண்டர் இணைப்பைப் பெற்றிருக்கின்றன என்பதே எனது உண்மையான வெற்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist