ஜூன் 20 முதல் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம்: காலை - மாலை இரு வேளையும் மானிய கோரிக்கை விவாதம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுவதாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

Jun 13, 2024 - 11:47
 0  0
ஜூன் 20 முதல் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம்: காலை - மாலை இரு வேளையும் மானிய கோரிக்கை விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுவதாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை - மாலை என இரு வேளையும் கூட்டம் நடத்தப்பட்டு 16 அமர்வுகளில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 15-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளில் விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். இதையடுத்து, 2024-25 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் 19, 20-ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்கள் மீதான விவாதம் 22-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவாக, விவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist