சேலம்: குட்கா விற்பனையை நெருக்கிய உணவுப் பாதுகாப்பு துறை - 8 மாதத்தில் ரூ.1 கோடி வரை அபராதம்

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினமான நேற்று, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவும், காவல்துறையினர் மூலமும் போதை பொருள் ஒழிப்பு பேரணி நடத்தப்பட்டது. குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் காவல்துறையை போலவே பல்வேறு அரசு துறைகள் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தான் சேலம் மாவட்ட உணவுப்பாதுக்காப்பு துறை 01.11.2023 முதல் 26.06.2024 தேதி வரை கிட்டத்தட்ட 6 மாதங்களில் 8,280 கடைகளை ஆய்வு செய்தும், அதில், 10,232 கி.கிராம் குட்கா பொருட்களை கைப்பற்றியும் உள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 கோடியே 11 லட்சத்து 53 ஆயிரத்து 228 ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் 527 கடைகள் உணவுப்பாதுக்காப்பு விதிக்கு முரண்பாடாக செயல்பட்டதால் மூடப்பட்டுள்ளது. அதன்மூலம் கடந்த 6 மாதங்களில் சுமார் 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரி கதிரவன்இதுகுறித்து மாவட்ட உணவுப்பாதுக்காப்பு துறை அதிகாரி கதிரவன் பேசியபோது, “போதைப்பொருள் என்றால் கஞ்சா மற்றும் அதைத்தாண்டிய பொருட்கள் மட்டும் கிடையாது. சாதரணமாக கடைகளில் கிடைக்கக்கூடிய குட்கா பொருட்களும் ஒரு வகையான போதைப்பொருட்கள் தான். இதனை அதிகமாக இளஞ்சிறார்கள், இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதறகாகவே எனக்கு கீழ் இருக்கக்கூடிய அதிகாரிகள் அனைவரையும் ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் 5 முறையாவது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இருக்கக்கூடிய டீ கடை, மளிகை கடை போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றேன். இதில், மேலும் பக்கபலமாக பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து குட்கா குறித்த தகவலை வழங்கி வருகின்றனர். மேலும் சமூக அக்கறைக்கொண்ட மாணவர்கள் எந்த நேரத்திலும் என்னுடைய தொலைபேசி எண் 99403 58471 -க்கு தகவல் கொடுத்தால், அவர்கள் வழங்கும் தகவல்கள் மீது மிகவும் பாதுக்காப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கஞ்சா மேலும் சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் பாபுவிடம் பேசியபோது, “கடந்த 3 மாதங்களில் சேலம் மாவட்டத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கஞ்சா ஊடுருவல் என்பது கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து சேலத்திற்குள் அதிகம் கொண்டுவரப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவும், சேலத்திற்குள் வராமல் தடுக்கும் பொருட்டாக அதிக அளவு வாகன தணிக்கை செய்தும் வருகின்றோம். இதுதொடர்பாக போதப்பொருட்கள் குறித்த தகவல்கள் எதுவாக இருந்தாலும் 9894761616 என்கிற எண்ணுக்கு தகவல் அளித்தால் உடனே நடவடிக்கை மேற்கொள்வதுடன், ரகசியங்கள் பாதுகாக்கப்படும்” என்றார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88சேலம்: கலைஞர், எம்.ஜி.ஆர் தங்கிய பங்களாவும்.. `பாழாகும்' பனமரத்துப்பட்டி ஏரியும்! - சீரமைக்கப்படுமா?

Jun 27, 2024 - 11:43
 0  1
சேலம்: குட்கா விற்பனையை நெருக்கிய உணவுப் பாதுகாப்பு துறை - 8 மாதத்தில் ரூ.1 கோடி வரை அபராதம்

உலக போதைப் பொருள் ஒழிப்பு தினமான நேற்று, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவும், காவல்துறையினர் மூலமும் போதை பொருள் ஒழிப்பு பேரணி நடத்தப்பட்டது. குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் காவல்துறையை போலவே பல்வேறு அரசு துறைகள் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தான் சேலம் மாவட்ட உணவுப்பாதுக்காப்பு துறை 01.11.2023 முதல் 26.06.2024 தேதி வரை கிட்டத்தட்ட 6 மாதங்களில் 8,280 கடைகளை ஆய்வு செய்தும், அதில், 10,232 கி.கிராம் குட்கா பொருட்களை கைப்பற்றியும் உள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 கோடியே 11 லட்சத்து 53 ஆயிரத்து 228 ரூபாய் என கூறப்படுகிறது.

மேலும் 527 கடைகள் உணவுப்பாதுக்காப்பு விதிக்கு முரண்பாடாக செயல்பட்டதால் மூடப்பட்டுள்ளது. அதன்மூலம் கடந்த 6 மாதங்களில் சுமார் 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரி கதிரவன்

இதுகுறித்து மாவட்ட உணவுப்பாதுக்காப்பு துறை அதிகாரி கதிரவன் பேசியபோது, “போதைப்பொருள் என்றால் கஞ்சா மற்றும் அதைத்தாண்டிய பொருட்கள் மட்டும் கிடையாது. சாதரணமாக கடைகளில் கிடைக்கக்கூடிய குட்கா பொருட்களும் ஒரு வகையான போதைப்பொருட்கள் தான். இதனை அதிகமாக இளஞ்சிறார்கள், இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதறகாகவே எனக்கு கீழ் இருக்கக்கூடிய அதிகாரிகள் அனைவரையும் ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் 5 முறையாவது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இருக்கக்கூடிய டீ கடை, மளிகை கடை போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றேன். இதில், மேலும் பக்கபலமாக பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து குட்கா குறித்த தகவலை வழங்கி வருகின்றனர். மேலும் சமூக அக்கறைக்கொண்ட மாணவர்கள் எந்த நேரத்திலும் என்னுடைய தொலைபேசி எண் 99403 58471 -க்கு தகவல் கொடுத்தால், அவர்கள் வழங்கும் தகவல்கள் மீது மிகவும் பாதுக்காப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கஞ்சா

மேலும் சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் பாபுவிடம் பேசியபோது, “கடந்த 3 மாதங்களில் சேலம் மாவட்டத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கஞ்சா ஊடுருவல் என்பது கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து சேலத்திற்குள் அதிகம் கொண்டுவரப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவும், சேலத்திற்குள் வராமல் தடுக்கும் பொருட்டாக அதிக அளவு வாகன தணிக்கை செய்தும் வருகின்றோம். இதுதொடர்பாக போதப்பொருட்கள் குறித்த தகவல்கள் எதுவாக இருந்தாலும் 9894761616 என்கிற எண்ணுக்கு தகவல் அளித்தால் உடனே நடவடிக்கை மேற்கொள்வதுடன், ரகசியங்கள் பாதுகாக்கப்படும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist