ராமேஸ்வரம் கோயில் இலவச தரிசன வழக்கு: மனுதாரரின் பின்னணியை விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணை!

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் அதிகாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். இந்த ஸ்படிகலிங்க பூஜையினை காண ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பக்தர்களிடம் கட்டணம் வசூலித்து தரிசனத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, இலவசமாக அனுப்ப வேண்டும் என மனு ஒன்றை ராமேஸ்வரம் திருக்கோயில் நிர்வாகத்திற்கு அளித்துவிட்டு அதன் அடிப்படையில் உத்தரவு ஒன்றை பிறப்பிக்க கோபி ஆச்சாரி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். மதுரை உயர் நீதிமன்ற கிளைஇந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு மற்றும் திருக்கோயில் சார்பில் ஏற்கனவே இதே போன்று பொதுநல வழக்கு தாக்கல் செய்து மாண்புமை சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்த விவரம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கினை விசாரித்த நீதிபதிகள், `இந்த பொதுநல வழக்கு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த மனு தாக்கல் செய்த மனுதாரரின் பின்னணி குறித்தும் மனுதாரருக்கு பின்னால் ஏதேனும் குழுக்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை தருமாறும்’ காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.மேலும் மனுதாரர் ஸ்ரீரங்கத்தில் வசித்து வருபவர் என்பதால் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், `திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு 28.06.24 அன்று காலை பத்து முப்பது மணிக்கு முன்பு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.இத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் வெள்ளியன்று தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Jun 27, 2024 - 11:43
 0  2
ராமேஸ்வரம் கோயில் இலவச தரிசன வழக்கு: மனுதாரரின் பின்னணியை விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணை!

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் அதிகாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். இந்த ஸ்படிகலிங்க பூஜையினை காண ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பக்தர்களிடம் கட்டணம் வசூலித்து தரிசனத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக, இலவசமாக அனுப்ப வேண்டும் என மனு ஒன்றை ராமேஸ்வரம் திருக்கோயில் நிர்வாகத்திற்கு அளித்துவிட்டு அதன் அடிப்படையில் உத்தரவு ஒன்றை பிறப்பிக்க கோபி ஆச்சாரி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

மதுரை உயர் நீதிமன்ற கிளை

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு மற்றும் திருக்கோயில் சார்பில் ஏற்கனவே இதே போன்று பொதுநல வழக்கு தாக்கல் செய்து மாண்புமை சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்த விவரம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கினை விசாரித்த நீதிபதிகள், `இந்த பொதுநல வழக்கு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த மனு தாக்கல் செய்த மனுதாரரின் பின்னணி குறித்தும் மனுதாரருக்கு பின்னால் ஏதேனும் குழுக்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை தருமாறும்’ காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும் மனுதாரர் ஸ்ரீரங்கத்தில் வசித்து வருபவர் என்பதால் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், `திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு 28.06.24 அன்று காலை பத்து முப்பது மணிக்கு முன்பு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் வெள்ளியன்று தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist