சேலத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: பொதுமக்கள் அவதி
சேலத்தில் திங்கள்கிழமை விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
சேலம்: சேலத்தில் திங்கள்கிழமை விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அதேபோல், ஏற்காட்டில் உருவான திடீர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் வாட்டி வதைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குளிர்ச்சியான சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் 3 மணி அளவில் சேலத்தில் துவங்கிய மழை விடிய விடிய பெய்தது. நேற்று தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 வரை 12 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.
What's Your Reaction?