“கள்ளச் சாராய விற்பனையில் அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு” - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
“கள்ளச்சாராய விற்பனையில் பாஜக, அதிமுகவினருக்கு தொடர்புள்ளது என்று தகவல் வருகிறது. பாஜக ஆளும் புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் இருந்து தான் மெத்தனால் வந்துள்ளது” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னை: “கள்ளச்சாராய விற்பனையில் பாஜக, அதிமுகவினருக்கு தொடர்புள்ளது என்று தகவல் வருகிறது. பாஜக ஆளும் புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் இருந்து தான் மெத்தனால் வந்துள்ளது.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம், யாரும் எதிர்பாராத ஒன்று. வருத்தப்படக்கூடிய சம்பவம் அது. முந்தைய ஆட்சியில் இருந்தவர்களை போல திசைதிருப்பாமல், நிகழ்வு நடந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார். உண்மையை கண்டறிய சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றியது மட்டுமில்லாமல், விசாரணை கமிஷனும் அமைத்து முதல்வர் ஸ்டாலின் அதிவேகமாக செயல்பட்டார். ஆனால், திட்டமிட்டு இதை அரசியலாக்குவதற்காக எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் இந்த விவகாரத்தை தவறான கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள்.
What's Your Reaction?