கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.  

Aug 2, 2024 - 10:14
 0  16
கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தினார். முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, சிஎம்டிஏ, சென்னை குடிநீர் வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள், மழைநீர் வடிகால்கள், பள்ளிக் கட்டிடங்கள், பேருந்து நிலையம், மருத்துவமனை, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள், வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள், மின் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist