‘புட்ப்ரோ 2024’ உணவு பதப்படுத்துதல் கண்காட்சி: சென்னையில் 3 நாட்கள் நடைபெறுகிறது
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 15-வது பதிப்பு “புட்ப்ரோ 2024” கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது
சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 15-வது பதிப்பு “புட்ப்ரோ 2024” கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.தியாகராஜன் கூறியதாவது: இந்திய தொழில் கூட்டமைப்பு 15-வது ஆண்டாக “புட்ப்ரோ2024” கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
What's Your Reaction?