போக்குவரத்து கழக இயக்குநராக சிறப்பு செயலர் கார்மேகம் நியமனம்

போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநராக எஸ்.கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Nov 27, 2024 - 16:22
 0  7
போக்குவரத்து கழக இயக்குநராக சிறப்பு செயலர் கார்மேகம் நியமனம்

சென்னை: போக்குவரத்து கழகங்களின் இயக்குநராக துறையின் சிறப்பு செயலர் எஸ்.கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஸ்வரண் சிங் ஐஏஎஸ் கடந்த 2001-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நிர்வாகத்தை அவர் சிறப்பாக நடத்தியதால், போக்குவரத்து கழகங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரியை மட்டுமே பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஆல்பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ் கடந்த 2023-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

இதேபோல, மற்ற போக்குவரத்து கழகங்களின் தலைவராகவும் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, போக்குவரத்து துறை சிறப்பு செயலராக பொறுப்பேற்ற ஆர்.லில்லி, சேலம், மதுரை திருநெல்வேலி போக்குவரத்து கழகங்களின் தலைவர் மற்றும் இயக்குநராகவும், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கோவை, கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகியவற்றின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist