உத்வேகம் இல்லா இந்திய அணியை மீண்டும் காத்த ஹர்மன்பிரீத் | ஒலிம்பிக் ஹாக்கி அலசல்
நியூஸிலாந்துக்கு எதிராக 3-2 வெற்றியிலும் ஹர்மன்பிரீத் கடைசியில் பெனால்டி ஷூட்டில் அடித்த கோல் நேற்று அர்ஜெண்டினா அணிக்கு எதிராக 59-வது நிமிடத்தில் 4-வது பெனால்டி கார்னரில் ஹர்மன்பிரீத் தூக்கி விட்ட அட்டகாசமான ஷாட்டினால் ஆன ட்ராவிலும் இந்திய ஹாக்கி அணியிடம் உத்வேகமான ஆட்டம் இன்மை பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

இப்போதைக்கு 2 ஆட்டங்களில் 4 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருக்கிறது இந்திய அணி. அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி விடலாம் என்று கருதினாலும் காலிறுதி நாக் அவுட் சுற்றில் இந்திய அணியின் இப்போதைய ஆட்ட முறை வெற்றி பெற உதவாது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
What's Your Reaction?