இஸ்ரேல் கடும் தாக்குதல்: காசாவில் 5 ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல் அவில்: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா மருத்துவமனைகளில் எரிபொருள் நெருக்கடி நிலவி வரும்நிலையில், மருத்துவமனைகளுக்குள் பல துறைகளில் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிக்கன நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜூன் 27 அன்று வெளியிடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை மற்றும் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து கிழக்கு காசா நகரத்திலிருந்து சுமார் 80,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
What's Your Reaction?