பப்புவா நியூ கினியா நாட்டில் பயங்கர நிலச்சரிவு: 100-க்கும் மேற்பட்டோர் பலி
தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
போர்ட் மோர்ஸ்பை: தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?