இந்தியா, அமெரிக்கா எச்சரித்த பிறகும் வெளிநாட்டு ஆய்வு கப்பலுக்கு தடை விதிக்க இலங்கை மறுப்பு

வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்தாண்டு முதல் விலக்கிக்கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

Jul 8, 2024 - 22:15
 0  1
இந்தியா, அமெரிக்கா எச்சரித்த பிறகும் வெளிநாட்டு ஆய்வு கப்பலுக்கு தடை விதிக்க இலங்கை மறுப்பு

டோக்யோ: வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அடுத்தாண்டு முதல் விலக்கிக்கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆய்வுக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த2022-ம் ஆண்டு சீனாவின் ஆய்வுகப்பல் யான் வாங் 5 இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நின்று சென்றது. கடந்த 2023-ம் ஆண்டில் சீனாவின் யான் வாங் 6 ஆய்வு கப்பல் இலங்கை வந்து சென்றது. இது குறித்து அமெரிக்கா, இந்தியா ஆகியவை இலங்கையிடம் கவலை தெரிவித்தன. அந்த கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் நின்று சென்றால், இந்தியாவை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என இலங்கையிடம் இந்தியாகவலை தெரிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist