இந்தியாவுக்கு 25% வரை வரி விதிக்க வாய்ப்பு: ட்ரம்ப் சூசகம்

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

Jul 30, 2025 - 16:57
 0  46
இந்தியாவுக்கு 25% வரை வரி விதிக்க வாய்ப்பு: ட்ரம்ப் சூசகம்

வாஷிங்டன்: இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவீதம் வரையில் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக அவர் சூசகமாக கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது, உலக நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி பட்டியலை வெளியிட்டார். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் இந்த புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதன்படி, கடந்த ஜூலை 9-ம் தேதி கெடு முடிய இருந்த நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist