ஆஸ்கர் பரிந்துரையில் ‘லாபதா லேடீஸ்’ - வலுக்கும் எதிர்ப்பு
ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் ஒவ்வொரு வருடமும் ஒரு படம் பரிந்துரைக்கப் படுவது வழக்கம்
ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் ஒவ்வொரு வருடமும் ஒரு படம் பரிந்துரைக்கப் படுவது வழக்கம். இந்த வருடம், ஆமிர்கான் தயாரிப்பில் அவரின்முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய ‘லாபதா லேடீஸ்’ என்ற இந்திப் படத்தை அனுப்புவதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு, சமீபத்தில் அறிவித்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
“இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக 'லாபதா லேடீஸ்' திரைப்படத்தைத் தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ‘லாபதா லேடீஸ்' பல்வேறு கருத்துகளை நகைச்சுவையோடு சொன்னாலும் உணர்வுப்பூர்வமாக இல்லை என்பதே உண்மை" என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
What's Your Reaction?