அரிய வகை செவித்திறன் குறைபாடு: பாடகி அல்கா யாக்னிக் வேதனைப் பகிர்வு
பிரபல இந்தி திரைப்பட பாடகி அல்கா யாக்னிக். தமிழ், உட்பட 25மொழிகளில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்
பிரபல இந்தி திரைப்பட பாடகி அல்கா யாக்னிக். தமிழ், உட்பட 25மொழிகளில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்தியில், 80 மற்றும் 90-களில் பிரபலமான ‘ஏக் தோ தீன்’, ‘சோலி கே பீச்சே கியாஹே’ உட்படபல சூப்பர் பாடல்களை பாடியுள்ளார். தமிழில், ஓரம்போ படத்தில் ‘இது என்ன மாயம்’, ‘வாய்மை’யில்‘கண்படும் உன் முகம்’ ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார். இவர் தனது செவித்திறன் திடீரென பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில வாரங்களுக்கு முன் விமானத்தில் இருந்து இறங்கும்போது, எதையும் கேட்க முடியாததை உணர்ந்தேன். மருத்துவர், வைரஸ் தாக்குதலால் உணர்திறன் நரம்பில் ஏற்பட்ட அரிய பாதிப்பால் செவித்திறன் இழப்புஏற்பட்டதாகத் தெரிவித்தார். சிகிச்சை எடுத்து வருகிறேன். என் ரசிகர்கள் மற்றும் இளம் பாடகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஹெட்போன்களில் பாடல்களை அதிக சத்தமாக வைத்து கேட்பதை தவிர்த்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?