“சர்ப்ரைஸ்களை வெளியே சொல்லாதீர்கள்” - ரசிகர்களுக்கு ‘ஸ்டார்’ பட இயக்குநர் வேண்டுகோள்
“படத்தில் உள்ள சர்ப்ரைஸ்களை வெளியில் சொல்ல வேண்டாம்” என ‘ஸ்டார்’ படத்தின் இயக்குநர் இளன் பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: “படத்தில் உள்ள சர்ப்ரைஸ்களை வெளியில் சொல்ல வேண்டாம்” என ‘ஸ்டார்’ படத்தின் இயக்குநர் இளன் பார்வையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஸ்டார் நாளை முதல். இந்தப் படத்தை என்னுடைய தந்தை ‘ஸ்டில்ஸ் பாண்டியன்’ அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். உங்களிடம் தாழ்மையான வேண்டுகோள். நாளை நீங்கள் படத்தை பார்த்துவிட்டு, படத்தில் உள்ள மூன்று முக்கியமான சர்ப்ரைஸை வெளியில் சொல்ல வேண்டாம். என்னுள் இருக்கும் கலைஞன் எல்லாரும் அந்த சர்ப்ரைஸை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். நன்றி” என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?