கதையின் நாயகனாக நடிக்க தயங்கிய முனீஷ்காந்த்!

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’.

Nov 10, 2025 - 17:04
 0  3
கதையின் நாயகனாக நடிக்க தயங்கிய முனீஷ்காந்த்!

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஷ்காந்த், கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. விஜயலட்சுமி அவர் மனைவியாக நடித்துள்ளார். கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நவ.21-ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “குடும்பத்தில் வேறுபட்ட மனநிலையில் இருக்கும் கணவன்- மனைவி பற்றிய படம் இது.முனீஷ்காந்த் - விஜயலட்சுமி கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.

முனீஷ்காந்த்துக்கு கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி நிம்மதியாக வாழ ஆசை. விஜயலட்சுமி நகரத்திலேயே வசதியாக வாழ நினைக்கிறார். இதனாலேயே இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist