Air India Express: ஒரே நேரத்தில் ஊழியர்கள் எடுத்த `லீவ்’ தடுமாறிய டாடா நிறுவனம் - நடந்தது என்ன?
இந்தியாவின் விமானப் போக்குவரத்து 1948-ம் ஆண்டுவரை டாடா நிறுவனம் வசம் இருந்தது. பிறகு, 1953−ம் ஆண்டு டாடாவிடமிருந்து பெறப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டது. அதிலிருந்து, இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான விமான நிறுவனமாக ‘ஏர் இந்தியா’ செயல்பட்டுவந்தது. அந்த நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு பல லட்சம் கோடி ரூபாயை செலவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express)2009−2010 நிதியாண்டில் ஏர் இந்தியாவை நவீனப்படுத்துவதற்காக, இந்திய அரசு ரூ.1,10,000 கோடி செலவிட்டது. ஆனாலும்கூட, அடுத்த பத்து ஆண்டுகளில் ரூ.61,562 கோடிக்கு ஏர் இந்தியா கடனாளியானது. இந்தக் கடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றும், அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு செயற்கையாக உருவாக்கப்பட்ட இழப்பு என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்திடம் 2022-ம் ஆண்டு இந்திய அரசு விற்றது. நட்டத்தையும், கடனையும் காரணம் காட்டி குறைந்த விலைக்கு ஏர் இந்தியாவை விற்றுவிட்டதாக அப்போதும் விமர்சனம் எழுந்தது.தற்போது டாடா நிறுவனத்திடம், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏ.ஐ.எக்ஸ் கனெக்ட், விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், ஏர் இந்தியாவையும் விஸ்தாராவையும் இணைத்து ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது. அதேபோல, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏ.ஐ.எஸ் கனெக்ட் ஆகியவற்றை இணைத்து ஒரு நிறுவனமாக மாற்றவும் டாடா குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.ரத்தன் டாடாஇது தற்போது பெரும் பிரச்னையாக மாறியிருக்கிறது. டாடா நிறுவனத்தின் இந்த இணைப்பு நடவடிக்கைக்கு, ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுகிறது... ஊழியர்கள் சமத்துவமாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். இணைப்பு நடவடிக்கை கூடாது என்பது ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று.ஆனால், ஊழியர்களின் கோரிக்கைகளை டாடா நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். எப்படியென்றால், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்ற ஒரே காரணத்தைக் கூறி, அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்தனர். அப்படியே, தங்கள் செல்போன்களையும் அவர்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்தனர்.டாடா குழுமம் | tata groupஊழியர்கள் விடுப்பு எடுத்ததால், மே 7-ம் தேதி இரவிலிருந்து 90 விமானங்களின் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. அதனால், விமான நிலையங்களில் பயணிகள் கோபமடைந்து போராட்டத்தில் இறங்கினர். அதன் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் நெருக்கடிக்கு ஆளானது. உடனே, விடுப்பு எடுத்தவர்களில் 25 ஊழியர்களை டாடா நிர்வாகம் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதே நேரத்தில், ஊழியர்களிடம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டது. அதில் சமரசம் ஏற்படவே, போராட்டத்தை ஊழியர்கள் விலக்கிக்கொண்டனர். ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், ஊழியர்களின் பணிநீக்க ஆணை ரத்து செய்யப்படும் என்று நிர்வாகம் உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகின. இப்போதைக்கு பிரச்னையை சமாளித்திருக்கிறது டாடா நிர்வாகம்.விமானங்கள்நிர்வாகத்துக்கும், ஊழியர்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்னை குறித்து ஒரு வாரத்துக்கு முன்பாகவே, ‘தொழிலாளர்களின் கோரிக்கைககள் நியாயமானவை’ என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு மண்டல தொழிலாளர் ஆணையர் கடிதம் எழுதியிருக்கிறார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சங்கமும் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறது. அதானி, அம்பானி... மோடியின் குற்றச்சாட்டுகள்... மோடி மீதே திருப்பும் காங்கிரஸ்!ஆனால், கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது நிர்வாகத்தின் தரப்பில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தில் இருக்கும் யாரும் அனுப்பிவைக்கப்படவில்லை என்றும், தொழிலாளர் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டதாகவும் ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டுகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகமோ, ‘ஊழியர்கள் சங்கம் எதையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை’ என்று கூறுகிறது. இந்த நிலையில்தான், 300 ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்திருக்கிறார்கள்.ஏர் இந்தியா விமானம்‘இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் இருக்கின்றன. எந்தவொரு நிர்வாகமும் அந்தச் சட்டங்களை மதிக்க வேண்டும். சட்டங்களை மீறக்கூடாது’ என்பது ஊழியர் தரப்பின் கருத்தாக இருக்கிறது. தொழிலாளர் சட்டங்களையும் மதிக்க மாட்டோம், ஊழியர் சங்கங்களையும் ஏற்க மாட்டோம் என்ற டாடா நிர்வாகத்தின் அணுகுமுறைதான் இந்தப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் என்கிறார்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள். தற்போது பேச்சுவார்த்தையுன் மூலம் தற்காலிக தீர்வு கண்டுள்ளது டாடா நிறுவனம்.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
இந்தியாவின் விமானப் போக்குவரத்து 1948-ம் ஆண்டுவரை டாடா நிறுவனம் வசம் இருந்தது. பிறகு, 1953−ம் ஆண்டு டாடாவிடமிருந்து பெறப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்டது. அதிலிருந்து, இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான விமான நிறுவனமாக ‘ஏர் இந்தியா’ செயல்பட்டுவந்தது. அந்த நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு பல லட்சம் கோடி ரூபாயை செலவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2009−2010 நிதியாண்டில் ஏர் இந்தியாவை நவீனப்படுத்துவதற்காக, இந்திய அரசு ரூ.1,10,000 கோடி செலவிட்டது. ஆனாலும்கூட, அடுத்த பத்து ஆண்டுகளில் ரூ.61,562 கோடிக்கு ஏர் இந்தியா கடனாளியானது. இந்தக் கடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றும், அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு செயற்கையாக உருவாக்கப்பட்ட இழப்பு என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனத்திடம் 2022-ம் ஆண்டு இந்திய அரசு விற்றது. நட்டத்தையும், கடனையும் காரணம் காட்டி குறைந்த விலைக்கு ஏர் இந்தியாவை விற்றுவிட்டதாக அப்போதும் விமர்சனம் எழுந்தது.
தற்போது டாடா நிறுவனத்திடம், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏ.ஐ.எக்ஸ் கனெக்ட், விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், ஏர் இந்தியாவையும் விஸ்தாராவையும் இணைத்து ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது. அதேபோல, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏ.ஐ.எஸ் கனெக்ட் ஆகியவற்றை இணைத்து ஒரு நிறுவனமாக மாற்றவும் டாடா குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
இது தற்போது பெரும் பிரச்னையாக மாறியிருக்கிறது. டாடா நிறுவனத்தின் இந்த இணைப்பு நடவடிக்கைக்கு, ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுகிறது... ஊழியர்கள் சமத்துவமாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். இணைப்பு நடவடிக்கை கூடாது என்பது ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று.
ஆனால், ஊழியர்களின் கோரிக்கைகளை டாடா நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். எப்படியென்றால், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்ற ஒரே காரணத்தைக் கூறி, அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்தனர். அப்படியே, தங்கள் செல்போன்களையும் அவர்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்தனர்.
ஊழியர்கள் விடுப்பு எடுத்ததால், மே 7-ம் தேதி இரவிலிருந்து 90 விமானங்களின் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. அதனால், விமான நிலையங்களில் பயணிகள் கோபமடைந்து போராட்டத்தில் இறங்கினர். அதன் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் நெருக்கடிக்கு ஆளானது. உடனே, விடுப்பு எடுத்தவர்களில் 25 ஊழியர்களை டாடா நிர்வாகம் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதே நேரத்தில், ஊழியர்களிடம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டது.
அதில் சமரசம் ஏற்படவே, போராட்டத்தை ஊழியர்கள் விலக்கிக்கொண்டனர். ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், ஊழியர்களின் பணிநீக்க ஆணை ரத்து செய்யப்படும் என்று நிர்வாகம் உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகின. இப்போதைக்கு பிரச்னையை சமாளித்திருக்கிறது டாடா நிர்வாகம்.
நிர்வாகத்துக்கும், ஊழியர்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்னை குறித்து ஒரு வாரத்துக்கு முன்பாகவே, ‘தொழிலாளர்களின் கோரிக்கைககள் நியாயமானவை’ என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு மண்டல தொழிலாளர் ஆணையர் கடிதம் எழுதியிருக்கிறார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சங்கமும் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
ஆனால், கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது நிர்வாகத்தின் தரப்பில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தில் இருக்கும் யாரும் அனுப்பிவைக்கப்படவில்லை என்றும், தொழிலாளர் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டதாகவும் ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டுகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகமோ, ‘ஊழியர்கள் சங்கம் எதையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை’ என்று கூறுகிறது. இந்த நிலையில்தான், 300 ஊழியர்கள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்திருக்கிறார்கள்.
‘இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் இருக்கின்றன. எந்தவொரு நிர்வாகமும் அந்தச் சட்டங்களை மதிக்க வேண்டும். சட்டங்களை மீறக்கூடாது’ என்பது ஊழியர் தரப்பின் கருத்தாக இருக்கிறது. தொழிலாளர் சட்டங்களையும் மதிக்க மாட்டோம், ஊழியர் சங்கங்களையும் ஏற்க மாட்டோம் என்ற டாடா நிர்வாகத்தின் அணுகுமுறைதான் இந்தப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் என்கிறார்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள். தற்போது பேச்சுவார்த்தையுன் மூலம் தற்காலிக தீர்வு கண்டுள்ளது டாடா நிறுவனம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?