3 வயதில் உலகின் மிக உயரமான எருமை என்ற சாதனையை படைத்த ‘கிங் காங்’!

தாய்லாந்தைச் சேர்ந்த 3 வயது நீர் எருமை, உலகின் மிக உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. 

Feb 14, 2025 - 18:38
 0  4
3 வயதில் உலகின் மிக உயரமான எருமை என்ற சாதனையை படைத்த ‘கிங் காங்’!

புதுடெல்லி: தாய்லாந்தைச் சேர்ந்த 3 வயது நீர் எருமை, உலகின் மிக உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்தில், நக்கோன் ராட்சசிமாவில் என்ற இடத்தில் உள்ள நின்லானீ பண்ணையில் ஒரு நீர் எருமை வாழ்ந்து வருகிறது. 3 வயதில் வழக்கமாக ஒரு நீர் எருமை இருக்கும் உயரத்தைவிட, 20 அங்குலம் உயரமாக உள்ளது. தற்போது, 6 அடி, 8 அங்குல உயரம் கொண்டதாக அறியப்படுகிறது. அனைவரிடமும் நன்றாக பழகுவதாக கூறப்படுகிறது. அதன் உரிமையாளர் இந்த நீர் எருமைக்கு ’கிங் காங்’ எனப் பெயரிட்டுள்ளார். ஒரு நாளைக்கு சுமார் 35 கிலோ உணவை உட்கொள்வதாகவும், குறிப்பாக வைக்கோல், சோளம் மற்றும் வாழைப்பழங்களை விரும்பி சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist