புதிய உச்சத்தில் தமிழக பால் உற்பத்தி: பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
பால் உற்பத்தியில் தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு 2019-2020 ஆண்டில் நாளொன்றுக்கு 316 கிராமாக இருந்தது 2022-2023 ஆம் ஆண்டில் அது 369 கிராமாக உயர்ந்திருக்கிறது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
சென்னை: “பால் உற்பத்தியில் தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு 2019-2020 ஆண்டில் நாளொன்றுக்கு 316 கிராமாக இருந்தது. 2022-2023 ஆம் ஆண்டில் அது 369 கிராமாக உயர்ந்திருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பால்வளத்துறை மிகச்சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. பால் உற்பத்தியில் வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி 2017 முதல் 2020 வரை முறையே 7.742, 8.362, 8.759 மில்லியன் டன்களாக இருந்த தமிழகத்தின் பால் உற்பத்தி 2021 முதல் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே 9.790, 10.107, 10.317 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது.
What's Your Reaction?