எஸ்ஐஆர் பணிக்கு முழு ஒத்துழைப்பு: அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

சென்னை மாவட்​டத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணிக்​கு, அரசி​யல் கட்​சிகள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

Nov 4, 2025 - 14:56
 0  17
எஸ்ஐஆர் பணிக்கு முழு ஒத்துழைப்பு: அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணிக்​கு, அரசி​யல் கட்​சிகள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்துக்​கான பணி​கள் (எஸ்​ஐஆர்) இன்று முதல் தமிழகம் முழு​வதும் தொடங்​கு​கின்றன. இதை முன்​னிட்​டு, சென்னை மாவட்ட தேர்​தல் அலு​வல​கம் சார்​பில், அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனை கூட்​டம், ரிப்​பன் மாளி​கை​யில், மாவட்ட தேர்​தல் அலு​வலர் ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில் திமுக, காங்​கிரஸ், சிபிஐ, சிபிஎம், அதி​முக, பாஜக, ஆம் ஆத்மி உள்​ளிட்ட அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றனர். இதில் சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் வீடு வீடாக தேர்​தல் அதி​காரி​கள், வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் மேற்​கொள்ள இருக்​கும் பணி​கள்​, தொடர்​பாக விளக்​கப்​பட்​டது. கூட்​டத்​தில் பேசிய மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன், இந்த எஸ்​ஐஆர் பணிக்கு அரசி​யல்​கள் கட்​சிகள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்​றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist