நிஜ்ஜார் கொலை: பிரதமர் மோடியை தொடர்புபடுத்திய ஊடக செய்திக்கு கனடா அரசு மறுப்பு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி பிரதமர் மோடி அறிந்திருந்தார் என்று கனடா நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த ஊடகச் செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது.
ஒட்டோவா: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி பிரதமர் மோடி அறிந்திருந்தார் என்று கனடா நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த ஊடகச் செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது.
முன்னதாக, நிஜ்ஜாரை கொலை செய்ய இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சதி திட்டம் தீட்டியதாக கூறி பெயர் வெளியிடாமல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
What's Your Reaction?