வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி: தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும்  கையெழுத்​திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.

Oct 31, 2025 - 10:38
 0  5
வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி: தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

சியோல்: பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கையெழுத்​திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.

இந்​தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் நீண்ட தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. ரஷ்​யா​விடம் இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கிய​தால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்​தது. அமெரிக்​கா​விடம் இருந்து சோளம் மற்​றும் சோயாபீன்ஸ் ஆகிய​வற்றை இறக்​குமதி செய்ய வேண்​டும் என அமெரிக்கா வலி​யுறுத்தி வரு​கிறது. ஆனால், இந்​திய விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கும் வகை​யில் எந்த ஒப்​பந்​தத்​தை​யும் ஏற்​க​மாட்​டோம் என இந்​திய அரசு கூறிவரு​கிறது. இதன் காரண​மாக இந்​தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் தாமத​மாகி வரு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist