செல்போனும், மாற்று சாதனங்களும் - ஹிஸ்புல்லா அணுகுமுறை சொல்லும் ‘பாடம்’ என்ன? | Explained

உலக நாடுகள் பன்னெடுங்காலமாக தீவிரவாதத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏவுகணைத் தாக்குதல், போர் விமானங்களின் மூலம் குண்டு மழை, சைபர் தாக்குதல் என வெவ்வேறு வடிவங்களிலான தாக்குதல்கள் இதுவரை நடந்துள்ளன. நடந்து கொண்டும் இருக்கின்றன. ஆனால், ஜேம்ஸ் பாண்ட், மிஷன் இம்பாசிபிள் பட இயக்குநர்களே யோசித்திராத வகையில் நாம் அன்றாடம் பார்க்கும் பொருட்களை ஆயுதங்களாக்கி, அவற்றை தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்திய ஒரு விநோத நிகழ்வை கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகம் பார்த்தது. இந்நிகழ்வில் இலக்கு என்பது தீவிரவாதிகளுக்கே என்றாலும் பறிபோனது என்னவோர் பொதுமக்களின் உயிரும்தான் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.செப்டம்பர் 17-ஆம் தேதிலெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் பலத்த காயமடைந்தனர். மறுநாள் இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே தீவிரவாதிகள் வசம் இருந்த வாக்கி-டாக்கிகளும் வெடித்தன. இதில் சில சோலார் தகடுகளும் அடக்கம் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர்.இப்படி ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் மட்டுமின்றி உலக நாடுகளே கூட கணித்திருக்கவில்லை. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தனிநபர்களின் கருவிகளை மிகத் துல்லியமாக கணக்கிட்டு வெடிக்கச் செய்த இந்தத் தாக்குதல் சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற குரல்களும் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்தத் திட்டமிடப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இருக்கலாம் என்று லெபனான் குற்றம்சாட்டியது. பேஜர்களும், வாக்கி-டாக்கிகளும்இந்தத் தாக்குதலுக்கு முன்பே ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்களுடைய தொலைத்தொடர்புகளுக்கு செல்போன்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு மாற்றாக பேஜர்களையும், வாக்கி-டாக்கிகளையுமே பயன்படுத்தி வந்தனர். செல்போன்களின் வருகைக்கு முன்பு 90-களிலேயே பேஜர்களின் பயன்பாடு வழக்கொழிந்து போய்விட்டன. எனினும், தங்களின் தொலைத்தொடர்புக்காக ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த ஆண்டு பேஜர்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, செல்போன்களை போல எளிதில் ட்ராக் செய்ய முடியாத பேஜர் மற்றும் வாக்கி-டாக்கிகள் மூலம் இஸ்ரேலின் கண்ணில் மண்ணை தூவலாம் என்பது ஹிஸ்புல்லா அமைப்பின் எண்ணம். செல்போன்களை தவிர்ஏற்கெனவே நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் கண்காணிக்கப்படுகிறோமா, நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றனவா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் இருந்துகொண்டிருக்கும் வேளையில், தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளை ஆயுதமாக்கி தாக்குதல் நிகழ்த்தவும் முடியும் என்ற புதிய அச்சம் எல்லாருடைய மனதில் எழுந்துள்ளது.இன்னொரு பக்கம், ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகு குற்ற நடவடிக்கைகளை தடுப்பதும், சிக்கலான கிரிமினல் வழக்குகளை தீர்ப்பதும் சுலபமாகிவிட்டது. உதாரணமாக, செல்போன்களை ட்ராக் செய்வதன் மூலம் காணாமல் போன நபர்களை கண்டுபிடிப்பது, கொலைக் குற்றவாளிகளை சுலபமாக கண்டறிவது, தீவிரவாதிகளை ட்ராக் செய்வது உள்ளிட்டவை அரசு அமைப்புகளின் வேலையை முன்பை காட்டிலும் எளிமையாக்கி உள்ளன.அதேபோல தனிப்பட்ட நபர்களுக்கு இது சாதகமான பல விஷயங்களை தருகிறது. உதாரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவும், கார் உள்ளிட்ட வாகனங்களை ட்ராக் செய்யவும், பத்திரிகையாளர்களுக்கும் இது பெருமளவில் உதவுகிறது. இந்த ட்ராக்கிங் வசதிகள், ஜிபிஎஸ், வைஃபை, சாட்டிலைட் வழியாக சாத்தியமாகின்றன. இந்த ட்ராக்கிங் என்பது பலவழிகளில் நடக்கிறது. நாம் செல்போன் டவர்களை கடப்பதன் மூலம் கிடைக்கும் நெட்வொர்க் லோக்கேஷன் டேட்டாவை பொதுவாக காவல் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் குற்றவாளிகளை ட்ராக் செய்யப் பயன்படுத்துகின்றன. இதுதவிர ஸ்மார்ட்போன்களில் நம்மையே அறியாமல் டெர்ம்ஸ் & கண்டிஷன்களை படிக்காமல் ஒப்புக்கொண்டு பதிவிறக்கம் செய்யும் செயலிகள் வழியாகவும் ட்ராக்கிங் செய்யப்படுகிறது. இப்படியான வழிகளின் மூலம் ஒரு பயனர் பற்றிய தகவல்களை, ஏன் அவர்களின் அங்க அசைவுகளை கூட ட்ராக் செய்வது என்பது அரசாங்கள், பெருநிறுவனங்கள், சைபர் கிரிமினல்களுக்கு மிக சுலபமான காரியம். இதுபோன்ற பாதிப்புகளுக்கு அஞ்சிதான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமை தங்களுடைய உறுப்பினர்கள், செல்போன்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியது. ஏன் பேஜர்?செல்போன்களைப் போல பேஜர்களை ட்ராக் செய்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. மெசேஜ்களை பகிர மட்டுமே பயன்படுத்தப்படும் பேஜர், பயனரின் தகவல்களை ட்ராக் செய்யும் வசதிகளை கொண்டிருப்பதில்லை. இதனால் ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன்களை விடுத்து பேஜர்களை நாடிச் சென்றனர். இப்படியான சூழலில்தான் அந்த பேஜர்களை வசப்படுத்த அதன் விநியோக சங்கிலியில் கைவைத்துள்ளது இஸ்ரேல். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் பேஜர் தயாரிப்புக்காக 3 போலி நிறுவனங்களை தொடங்கியது இஸ்ரேல் உளவுத் துறை. அதில் ‘பிஏ சிகன்சல்டிங்’ என்ற ஒரு நிறுவனம் தைவான் நாட்டின் கோல்ட் அப்பல்லோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேஜர்களை தயாரித்து வந்தது. இந்த பேஜர்களின் உட்பகுதியில் 3 கிராம் எடையுள்ள வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டன.இந்த நிறுவனத்திடம் இருந்துதான் ஹிஸ்புல்லா அமைப்பு 5,000 பேஜர்களை வாங்கியது. ஏற்கெனவே திட்டமிட்டபடி, உரிய நேரம் பார்த்து அந்த பேஜர்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்து மோசாட் தாக்குதல் நடத்தியதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. லெபனான் சம்பவத்தின் எதிரொலியாக, ஒவ்வொரு நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் கூட விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது தெளிவாகிறது. இந்தப் புதுரக தாக்குதலுக்கு இலக்கு ஆகாமல் கவனித்துக் கொள்ள தங்கள் வசமுள்ள தொலைத்தொடர்பு சாதனங்களை ஆராய்வது அத்தியாவசம் ஆகியுள்ளது.லெபனானை அதிரவைத்த பேஜர், வாக்கிடாக்கி அட்டாக் - இது எந்த மாதிரி டெக்னாலஜி?ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஸ்ம

Sep 23, 2024 - 16:42
 0  5
செல்போனும், மாற்று சாதனங்களும் - ஹிஸ்புல்லா அணுகுமுறை சொல்லும் ‘பாடம்’ என்ன? | Explained

உலக நாடுகள் பன்னெடுங்காலமாக தீவிரவாதத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏவுகணைத் தாக்குதல், போர் விமானங்களின் மூலம் குண்டு மழை, சைபர் தாக்குதல் என வெவ்வேறு வடிவங்களிலான தாக்குதல்கள் இதுவரை நடந்துள்ளன. நடந்து கொண்டும் இருக்கின்றன.

ஆனால், ஜேம்ஸ் பாண்ட், மிஷன் இம்பாசிபிள் பட இயக்குநர்களே யோசித்திராத வகையில் நாம் அன்றாடம் பார்க்கும் பொருட்களை ஆயுதங்களாக்கி, அவற்றை தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்திய ஒரு விநோத நிகழ்வை கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகம் பார்த்தது. இந்நிகழ்வில் இலக்கு என்பது தீவிரவாதிகளுக்கே என்றாலும் பறிபோனது என்னவோர் பொதுமக்களின் உயிரும்தான் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

செப்டம்பர் 17-ஆம் தேதி

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் பலத்த காயமடைந்தனர். மறுநாள் இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே தீவிரவாதிகள் வசம் இருந்த வாக்கி-டாக்கிகளும் வெடித்தன. இதில் சில சோலார் தகடுகளும் அடக்கம் என்று சொல்லப்படுகிறது. இதுவரை இந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிகிச்சையில் உள்ளனர்.

இப்படி ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் மட்டுமின்றி உலக நாடுகளே கூட கணித்திருக்கவில்லை. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தனிநபர்களின் கருவிகளை மிகத் துல்லியமாக கணக்கிட்டு வெடிக்கச் செய்த இந்தத் தாக்குதல் சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற குரல்களும் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்தத் திட்டமிடப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இருக்கலாம் என்று லெபனான் குற்றம்சாட்டியது.

இந்தத் தாக்குதலுக்கு முன்பே ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்களுடைய தொலைத்தொடர்புகளுக்கு செல்போன்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு மாற்றாக பேஜர்களையும், வாக்கி-டாக்கிகளையுமே பயன்படுத்தி வந்தனர். செல்போன்களின் வருகைக்கு முன்பு 90-களிலேயே பேஜர்களின் பயன்பாடு வழக்கொழிந்து போய்விட்டன. எனினும், தங்களின் தொலைத்தொடர்புக்காக ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த ஆண்டு பேஜர்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, செல்போன்களை போல எளிதில் ட்ராக் செய்ய முடியாத பேஜர் மற்றும் வாக்கி-டாக்கிகள் மூலம் இஸ்ரேலின் கண்ணில் மண்ணை தூவலாம் என்பது ஹிஸ்புல்லா அமைப்பின் எண்ணம்.

ஏற்கெனவே நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் கண்காணிக்கப்படுகிறோமா, நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றனவா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் இருந்துகொண்டிருக்கும் வேளையில், தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளை ஆயுதமாக்கி தாக்குதல் நிகழ்த்தவும் முடியும் என்ற புதிய அச்சம் எல்லாருடைய மனதில் எழுந்துள்ளது.

இன்னொரு பக்கம், ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகு குற்ற நடவடிக்கைகளை தடுப்பதும், சிக்கலான கிரிமினல் வழக்குகளை தீர்ப்பதும் சுலபமாகிவிட்டது. உதாரணமாக, செல்போன்களை ட்ராக் செய்வதன் மூலம் காணாமல் போன நபர்களை கண்டுபிடிப்பது, கொலைக் குற்றவாளிகளை சுலபமாக கண்டறிவது, தீவிரவாதிகளை ட்ராக் செய்வது உள்ளிட்டவை அரசு அமைப்புகளின் வேலையை முன்பை காட்டிலும் எளிமையாக்கி உள்ளன.

அதேபோல தனிப்பட்ட நபர்களுக்கு இது சாதகமான பல விஷயங்களை தருகிறது. உதாரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவும், கார் உள்ளிட்ட வாகனங்களை ட்ராக் செய்யவும், பத்திரிகையாளர்களுக்கும் இது பெருமளவில் உதவுகிறது. இந்த ட்ராக்கிங் வசதிகள், ஜிபிஎஸ், வைஃபை, சாட்டிலைட் வழியாக சாத்தியமாகின்றன.

இந்த ட்ராக்கிங் என்பது பலவழிகளில் நடக்கிறது. நாம் செல்போன் டவர்களை கடப்பதன் மூலம் கிடைக்கும் நெட்வொர்க் லோக்கேஷன் டேட்டாவை பொதுவாக காவல் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் குற்றவாளிகளை ட்ராக் செய்யப் பயன்படுத்துகின்றன. இதுதவிர ஸ்மார்ட்போன்களில் நம்மையே அறியாமல் டெர்ம்ஸ் & கண்டிஷன்களை படிக்காமல் ஒப்புக்கொண்டு பதிவிறக்கம் செய்யும் செயலிகள் வழியாகவும் ட்ராக்கிங் செய்யப்படுகிறது.

இப்படியான வழிகளின் மூலம் ஒரு பயனர் பற்றிய தகவல்களை, ஏன் அவர்களின் அங்க அசைவுகளை கூட ட்ராக் செய்வது என்பது அரசாங்கள், பெருநிறுவனங்கள், சைபர் கிரிமினல்களுக்கு மிக சுலபமான காரியம். இதுபோன்ற பாதிப்புகளுக்கு அஞ்சிதான் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமை தங்களுடைய உறுப்பினர்கள், செல்போன்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.

செல்போன்களைப் போல பேஜர்களை ட்ராக் செய்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. மெசேஜ்களை பகிர மட்டுமே பயன்படுத்தப்படும் பேஜர், பயனரின் தகவல்களை ட்ராக் செய்யும் வசதிகளை கொண்டிருப்பதில்லை. இதனால் ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன்களை விடுத்து பேஜர்களை நாடிச் சென்றனர். இப்படியான சூழலில்தான் அந்த பேஜர்களை வசப்படுத்த அதன் விநியோக சங்கிலியில் கைவைத்துள்ளது இஸ்ரேல்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் பேஜர் தயாரிப்புக்காக 3 போலி நிறுவனங்களை தொடங்கியது இஸ்ரேல் உளவுத் துறை. அதில் ‘பிஏ சிகன்சல்டிங்’ என்ற ஒரு நிறுவனம் தைவான் நாட்டின் கோல்ட் அப்பல்லோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேஜர்களை தயாரித்து வந்தது. இந்த பேஜர்களின் உட்பகுதியில் 3 கிராம் எடையுள்ள வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டன.

இந்த நிறுவனத்திடம் இருந்துதான் ஹிஸ்புல்லா அமைப்பு 5,000 பேஜர்களை வாங்கியது. ஏற்கெனவே திட்டமிட்டபடி, உரிய நேரம் பார்த்து அந்த பேஜர்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்து மோசாட் தாக்குதல் நடத்தியதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

லெபனான் சம்பவத்தின் எதிரொலியாக, ஒவ்வொரு நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளும் கூட விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது தெளிவாகிறது. இந்தப் புதுரக தாக்குதலுக்கு இலக்கு ஆகாமல் கவனித்துக் கொள்ள தங்கள் வசமுள்ள தொலைத்தொடர்பு சாதனங்களை ஆராய்வது அத்தியாவசம் ஆகியுள்ளது.

ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஸ்மார்ட்போன்களை தவிர்க்கும் முடிவில் நமக்கும் சில பாடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் எந்த நேரத்திலும் எந்த வழியிலும் கண்காணிக்கப்படலாம் என்று நினைவூட்டலே இதுபொன்ற நிகழ்வுகள். இன்னொரு பக்கம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு கருவி நம்மிடம் வந்து சேரும் முன்னரே அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி நமக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பதை இஸ்ரேலின் இந்த பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல் சம்பவங்கள் பறைசாற்றுகின்றன.!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Loading…

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist