சென்னை காம்தார் நகர் பிரதான சாலை இனி ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ - தமிழக அரசு

திரை இசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயர் சூட்டப்படும்  என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Sep 26, 2024 - 09:48
 0  5
சென்னை காம்தார் நகர் பிரதான சாலை இனி ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ - தமிழக அரசு

சென்னை: மறைந்த திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist